சென்னை: ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தவெக தலைவர் விஜய்யின் அரசியல் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். கட்சி பெயரை அறிவித்த அன்றே 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் களம் காண்பதே உறுதி என்று தெரிவித்திருந்தார். அதன்பின்னர் தனது கட்சிப்பணிகளை சினிமா பணிகளுக்கு இடைஇடையே செய்து வந்தார்.
அதுமட்டுமின்றி சினிமாவை முழுவதுமாக விட்டு விட்டு தான் அரசியலில் செயல்பட போவதாகவும் தெரிவித்தார். அதன்படி தனது கடைசி படமான ஜனநாயகம் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு, தற்பொழுது முழு அரசியல்வாதியாக செயல்பட தொடங்கியுள்ளார். இதற்கிடையே கடந்த மாதம் 12 மற்றும் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி விஜய் கவுரவித்தார். விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அரசியல் மேடைகளில் பெரியளவில் தோன்றவில்லை என்பது மற்ற கட்சிகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் விஜய் அரசியல் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாகவும், முதற்கட்டமாக 100 இடங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என்றும், இந்த சுற்றுப்பயணம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து தொடங்கும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}