பெங்களூரு: விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி அதை மீண்டும் தரையிறக்கி புதிய சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.
தான் இருந்த இடத்திலிருந்து சற்று அருகே போய் தரையிறங்கி விக்ரம் லேண்டர் தனது கெத்தைக் காட்டியுள்ளது.
சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் விக்ரம் லேண்டர் நிலவின் தென் முனையில் இறங்கியுள்ளது. அதில் இணைக்கப்பட்டிருந்த பிரக்யான் ரோவரும் அதிலிருந்து வெளியே வந்து விட்டது. இருவரும் இணைந்து பல்வேறு புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது நிலவில் இரவு தொடங்கியிருப்பதால் இருவரும் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் லேண்டரில் ஒரு குட்டி வேலையைச் செய்துள்ளது இஸ்ரோ. அதாவது லேண்டரில் உள்ள ராக்கெட்களை இயக்கி அதை 40 செமீ உயரத்திற்கு மேலெழும்ப செய்தது. பின்னர் தான் இருந்த இடத்திலிருந்து 30 முதல் 40 செமீ தொலைவில் அதை தரையிறக்கியது. இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாகும். இந்த முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவீட்டில், விக்ரம் லேண்டர் தனது நோக்கத்தை மிகச் சிறப்பாக செய்துள்ளது. எதிர்பார்ப்பையும் தாண்டி அது சிறப்பாக செயல்படுகிறது. ஒரு பரீட்சார்த்தை முயற்சியிலும் அது வெற்றி பெற்றுள்ளது. தனது என்ஜின்களை செயல்படுத்தி இருந்த இடத்திலிருந்து 40 செமீ உயரத்திற்கு எழும்பி பின்னர் தான் இருந்த இடத்திலிருந்து 30 முதல் 40 செமீ அருகே அது தரையிறங்கியது.
இதில் ஒரு முக்கியத்துவம் உள்ளது. அதாவது தரையிறங்கிய விண்கலம் மாதிரிகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கிளம்பி வர முடியுமா என்பதுதான் இந்த சோதனையின் நோக்கம். எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதனை அனுப்பினால், இதேபோல தரையிறங்கிய பின்னர் மீண்டும் விண்கலம் கிளம்பி வர முடியுமா என்பதற்கான சாதனை. அந்த வகையில் இது மிகவும் முக்கியமான சோதனையாகும்.
இந்த சோதனையின்போது அனைத்துமே சிறப்பாக செயல்பட்டன. லேண்டர் மீண்டும் தரையிறங்கிய பின்னர் அனைத்தும் இயல்பான நிலையில் உள்ளன. அதன் கருவிகள் அனைத்தும் வழக்கம் போல செயல்படுகின்றன. லேண்டர் ஆரோக்கியமாக உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}