விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த எப்ரல் 6ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார். பொதுவாக ஒரு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலும் அல்லது ராஜினாமா செய்தாலும் ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். அந்த விதிப்படி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. அப்போதே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜூன் 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகி, ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் ஜூன் 24ஆம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு, பின்னர் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வாக்குப் பதிவு ஜூலை 10ம் தேதி நடைபெறும், வாக்குகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய திட்டங்களை அரசு அமல்படுத்தக்கூடாது. ஏற்கனவே செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை தொடர எந்த தடையும் இல்லை. ரூ. 50,000க்கு மேல் ரொக்கமாக கொண்டு சென்றால் உரிய ஆவணம் வைத்திருக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}