விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அத்தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி இறந்ததை அடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூன் 21 ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி ஆகும். திமுக கூட்டணியில் திமுகதான் இங்கு சிட்டிங் எம்எல்ஏ என்பதால் அக்கட்சியே மீண்டும் போட்டியிடுகிறது.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் முக்கிய அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா களமிறங்குவதாக திமுக தலைமை கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதல்வருமான மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளள அன்னியூர் சிவா, திமுகவின் விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறு நாளே தனது வேட்பாளரை அறிவித்து விட்டது. இன்று காலையில்தான் புதிய நிர்வாகிகளும் மாவட்ட அளவில் மாற்றப்பட்டனர். தேர்தல் களத்தில் திமுக காளைப் பாய்ச்சலை கையில் எடுத்துள்ளதால், கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}