களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. இறுதிப் போட்டியில் 29 வேட்பாளர்கள்!

Jun 26, 2024,06:01 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இத்தொகுதியில் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், தற்போது இறுதியாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அத்தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூன் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.




திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 56 பேர் மொத்தம் 64 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சி இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்து இன்றைக்குள் மனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இன்று மதியம் 3 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் தற்போது இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் தாக்கல் செய்த மொத்தம் 64 வேட்பு மனுக்களில்,35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, அவற்றில் 29 மனுக்கள் ஏற்கப்பட்டு அவர்கள் இறுதிக் களத்தில் உள்ளனர்.


பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு மாம்பழ சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சினமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சந்திரசேகர் அறிவித்துள்ளார். 


வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 2,36,000 வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்