விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் பாமக போட்டியிடும் என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் பாமக வேட்பாளராக வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுவார் என அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலை 10ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24ம் தேதி நடைபெறும்.இந்த மனுக்களை திரும்ப பெற வரும் 26ம் தேதி கடைசி நாள். அன்றே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து ஜூன் 10ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி போட்டியிடுவதாக அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10&ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி அவர்கள் போட்டியிடுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
3 கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு
விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவதாகவும், நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா போட்டியிடுவதாகவும் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று பாமக வேட்பாளர் சி அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
ஆனால் இதுவரை அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எப்போதுமே தேர்தல் களத்தில் முந்தும் அதிமுக இந்த முறை ரொம்ப பின்தங்கியுள்ளது. அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு தான் தேர்தல் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}