விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் விக்கிரவாண்டி உள்பட 13 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியை இன்று அறிவித்தது தேர்தல் ஆணையம்.
கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார் புகழேந்தி. அப்போது லோக்சபா தேர்தல் நடைமுறைகள் தொடங்கியிருந்தன. இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது.

பதினெட்டாவது லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மே ஒன்றாம் தேதி வரை நடைபெற்றது. அப்போதே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி தேதி நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாக உள்ளது. மனுத் தாக்கல் செய்வதற்கு ஜூன் 21ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் ஜூன் 24ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். பின்னர் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வாக்குப் பதிவு ஜூலை 10ம் தேதி நடைபெறும், வாக்குகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
{{comments.comment}}