சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 35,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலைகளுக்குப் போதிய பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 65 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று முதலே விநாயகர் சிலை விற்பனையும் மாநிலம் முழுவதும் களை கட்டத் தொடங்கி விட்டது. பெரும்பாலும் களிமண் சிலைகள்தான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. தெருவோரங்களில், பஜார் பகுதிகளில் சிலைகள் விற்பனை அதிகம் காணப்பட்டது. விதம் விதமான பிள்ளையார் சிலைகளும் விற்பனை செய்யப்பட்டன. விநாயகர் சிலைகள் தவிர பூஜை தொடர்பான பிற பொருட்களின் விற்பனையும் களை கட்டியிலிருந்தது. விலையும் இந்த முறை அதிகமாக இருப்பதாக மக்கள் கூறினர்.
விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வார இறுதியைத் தொடர்ந்து மக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதால் அதிக அளவில் சிறப்புப் பேருந்துகளுக்கும் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}