சண்டிகர்: ஹரியானா சட்டசபைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அங்கு வெற்றி பெற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதலே எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதற் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜூலானா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஒலிம்பிக் வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்டார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இறுதிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார் வினேஷ் போகத். இறுதிப் போட்டிக்கு முன்னதாக அவரது உடல் எடையில் 100 கிராம் அதிகம் இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது பிரதமர் மோடி உட்பட அனைத்து தரப்பினரும் வினேஷ் போகத்திற்கு ஆதரவு குரல் எழுப்பினர். இந்தியா திரும்பிய அவருக்கு அனைவரும் உற்சாக வரவேற்பும் அளித்தனர். இந்தியா திரும்பிய நிலையில், வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
வினேஷ் போகத் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை பெற்று வந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் பைராகி குமார் பின்னடைவை சந்தித்து வந்தார். 14வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் தோற்கடித்துள்ளார். கடந்த 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் கோட்டை விட்ட வெற்றியை சட்டசபைத் தேர்தலில் பெற்றுள்ளார் வினேஷ் போகத்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}