ஜிஎஸ்டியால் நசுக்கப்படும் மக்கள்.. "அடித்துக் கொள்ளும் நிலை வரும்"..  வினோதினி எச்சரிக்கை!

Apr 19, 2023,04:45 PM IST
சென்னை: திருட்டுக்குப் பரிச்சயமில்லாதவர்கள் கூட திருடும் நிலைக்குத் தள்ளப்படும் அளவுக்கு நமது சமூகமும், இன்றைய காலகட்டமும் மாறி வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் விதிக்கப்படும் வரிகள், விலைவாசி உயர்வு, குறைந்த சம்பளம் என பல காரணிகளே இதற்கு முக்கியக் காரணம் என்று நடிகை வினோதினி கூறியுள்ளார்.

திரைப்பட நடிகை வினோதினி சமீப காலமாக சமூகம் சார்ந்த, நாட்டு நடப்புகளை அடிப்படையாகக் கொண்டு Spoof Videos போட்டு வருகிறார். இது மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக பாஜக தொடர்பான, மத்திய அரசு தொடர்பான இவரது விமர்சன வீடியோக்கள் பெரும் வைரலாகியுள்ளன. அதிலும் அண்ணாமலை தொடர்பான வீடியோக்கள் மிகப் பெரிய வைரலாகின.



இந்த நிலையில், வினோதினி ஒரு பதிவு போட்டுள்ளார். அதிலும் அவர் பாஜக அரசை விடவில்லை.. லேசுபாசாக கோடிட்டுக் காட்டி விட்டு போயுள்ளார்.. அந்தப் பதிவு இதோ:

சென்ற வாரம் என்னிடமிருந்து 2 நபர்கள்  மொத்தம் 25000 ரூ திருடிவிட்டனர். (தனித்தனியே நடந்த இரு சம்பவங்கள்). இருவர் மீதும் போலீஸ் கம்ப்ளையிண்ட் தரப்பட்டு இந்த வாரத்திற்குள் பணத்தைத் திரும்பத் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் இருவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இல்லையென்றாலும், ஒரு வகையான அன்னாடங்காச்சிகள் தான். ஒருவர் வீட்டு painter. மற்றொருவர் mechanic. தேவைக்காக பணம் திருடிவிட்டனர். CCTV footage இருந்ததால் ஒருவர் ஒப்புக்கொண்டார். மனைவியின் நம்பருக்கு அழைத்து கழுவி ஊத்தியதாலும் அந்த மனைவியுடன் இவர் இப்பொழுது வாழாததாலும் மற்றொருவர் ஒப்புக்கொண்டார். இருவரும் நன்றாக வேலை செய்யக்கூடியவர்கள். In fact, அந்த மெக்கானிக்கை எங்களுக்கு பல வருடங்களாகத் தெரியும். அந்த painter தனியாக project வாங்கியும், Urban Company என்ற corporateஇலும் contract வேலைப் பார்க்கிறவர்.

சாதாரணமாக, இப்படிப்பட்டவர்கள் உழைத்து சாப்பிடவே நினைப்பார்கள். Lower to middle classஇல் இருக்கும் இதுபோன்றவர்கள் தங்களது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் பல aspirationsஓடு வாழ்வர். தனது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த கடுமையாக உழைப்பார்கள். பின் இவர்களை (அதாவது களவுக்குப் பரிச்சயமில்லாதவர்களை) எது திருடத் தூண்டுகிறது? இன்றைய காலகட்டமும், நாம் வாழும் சமூகச்சூழலும்தானே.

Demonetisation, GST, state taxes, inflation, petrol hike, electricity hike, low quality of goods, increasing divide between rich and poor, high interest rates என்று பொது மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஏழைக்குடும்பத்திற்கு கூட சென்னை போன்ற metroவில் மாதம் 20-25000 ரூ தேவைப்படுகிறது. இதில் அதிக நேர வேலை, traffic, அதனால் ஏற்படும் உடல் மற்றும் மனக்கோளாறுகள், சம்பளங்கள் சரியான நேரத்திற்கு வராத பிரச்சனைகள், corporateகளுடைய vendorகளாக வேலை செய்யும் delivery boys/ executivesஉடைய உழைப்பைச் சுரண்டி commission போக அவர்களுக்கு பிச்சை போடுவதுபோல் சம்பளம் தரும் போக்கு என இன்னும் காரணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இனிவரும் காலங்களில் மனிதனை மனிதன் வயிற்றுப்பசிக்காக அடித்துக்கொல்லும் வாய்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் அதில் ஒரே நல்ல விஷயம் - அப்பொழுதாவது, சாதி மதம் ஒழிந்து அடுத்த வேளை சாப்பாடு/தண்ணி/காற்று உள்ளவன் - இல்லாதவன் என்ற இரண்டே பிரிவுகளாக நிற்போம்.

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்