பார்படாஸ்: புயல் வீசிக் கொண்டிருக்கும் பார்படாஸில், ஹோட்டலில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, புயல் வீசுவதை தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு வீடியோ காலில் போட்டுக் காட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான பார்படாஸில் சமீபத்தில் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. அதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக உலகக் கோப்பையை தட்டிச் சென்றது இந்தியா. ஆனால் போட்டி முடிந்த சில மணி நேரங்களிலேயே அங்கு பெரில் சூறாவளி வந்து விட்டது. இதனால் இந்திய அணியினரும், போட்டியைக் கவர் செய்யச் சென்றிருந்த இந்திய பத்திரிகையாளர்களும் அங்கிருந்து வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

தற்போது நிலைமை சற்று மேம்பட்டிருப்பதால் இந்திய குழுவினரை அழைத்து வர சிறப்பு விமானம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் விராட் கோலி தொடர்பான ஒரு வீடியோ கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி, அனுஷ்கா சர்மா சம்பந்தப்பட்ட எந்த வீடியோவாக இருந்தாலும் சரி இன்ஸ்டன்ட் ஆக அது வைரலாகி விடும். காரணம், பட் க்யூட்டான தருணங்களை வீடியோவாக்குவதில் அவர்கள் கில்லாடிகள்.
இப்படித்தான் டி20 இறுதிப் போட்டி முடிந்ததும் தனது மனைவிக்குப் போன் போட்ட விராட் கோலி அவருடன் வீடியோ காலில் மைதானத்தில் இருந்தபடியே பேசினார். தனது குழந்தையையும் அவர் வீடியோ காலில் கொஞ்சினார். அவர் க்யூட்டாக குழந்தையைக் கொஞ்சிய வீடியோ பலரையும் கவர்ந்தது. இந்த நிலையில் இப்போது இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளது.
இதில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு வீடியோ கால் போட்ட விராட் கோலி, அவரிடம் சூறாவளி குறித்து விளக்கியுள்ளார் போல. பின்னர் அப்படியே போனுடன் அறைக்கு வெளியே வந்த அவர் கடலில் சூறாவளியால் ஏற்பட்ட கொந்தளிப்பைக் காட்டி எப்படி புயல் வீசுகிறது பார் என்று காட்டியுள்ளார். மேலும் தனது குழந்தைகள் வமிகா மற்றும் அகாய் ஆகியோருக்கும் சூறாவளியைக் காட்டி பாருங்க பாருங்க என்று விளக்கியுள்ளார் விராட் கோலி.
பெரில் சூறாவளி காரணமாக பார்படாஸ் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}