தொடர்கதையாகும் பட்டாசு ஆலை வெடிவிபத்து.. இன்றும் விபத்து.. இரண்டு பேர் பலி!

Aug 14, 2024,02:41 PM IST

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில்  இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் சிக்கி உயிர் இழந்துள்ளனர்.


ஸ்ரீவில்லிபத்தூர் மாயாண்டிதேவன் பட்டியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயக்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 60க்கும் மேற்பட்டவர்கள் இங்குள்ள 42 அறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆலையில் பணிபுரிபவர்கள் இன்று வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். வேலை நேரத்தில் சல்பரேட் மருந்து தயாரிக்கும் பொடியை வேனில் இருந்து இறக்கும் பணி நடைபெற்றது. அப்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வேனில் பற்றிய தீ கொளுந்து விட்டு எறிந்தது. இதில் புலிகுட்டி மற்றும் கார்த்தி என்பவர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.




தீ கொளுந்து விட்டு எரிந்ததால், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் ஈடுபட்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நடப்பது தொடர் கதையாக நடந்து வருகிறது. 


வெடி விபத்துகளில் சிக்கி அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.  அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் விதிக்கப்பட்டிருந்தும் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. அடுத்து தீபாவளி பண்டிகை வர இருப்பதால், இது போன்ற விபத்துக்கள் அதிகரிக்காத வண்ணம் அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெண்களின் பாதுகாப்பிற்காக... இளஞ்சிவப்பு ரோந்து வானங்கள் சேவை தொடக்கம்!

news

வானிலை கொடுத்த அப்டேட்... தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

news

கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல்.. திமுக ஆட்சி எதற்கு: எடப்பாடி பழனிச்சாமி

news

SIRஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

news

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகள் தப்ப முடியாது: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

news

நகர்ப்புற போக்குவரத்தில் சாதனை.. 2 விருதுகளை அள்ளியது சென்னை மெட்ரோ நிறுவனம்

news

லோகேஷ் கனகராஜை புறக்கணித்தார்களா.. கமலும், ரஜினியும்.. பரபரக்கும் கோலிவுட்!

news

தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

news

மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,760 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்