"மணிப்பூர்".. 80 நாட்களுக்குப் பிறகு 80 விநாடிகளே பேசியுள்ளார் பிரதமர்.. காங். எம்.பி. தாக்கு

Jul 21, 2023,11:15 AM IST

டெல்லி: மணிப்பூர் பற்றி எரிய ஆரம்பித்து,  80 நாட்களுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்துப் பேசியுள்ளார். அதுவும் வெறும் 80 விநாடிகளே அவர் பேசியுள்ளார் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்


மணிப்பூர் மாநிலம் கடந்த சில மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி இனத்தவர்களுக்கும் இடையே வெடித்துள்ள இந்த கலவரத்தால்,  நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 


இந்த வன்முறை வெறியாட்டத்தின் விபரீத வீரியத்தை உணர்த்தும் வகையிலான ஒரு வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ���ாட்டு மக்களை பதறச் செய்தது. இரண்டு குக்கி இனப் பெண்களை மெ��்தி இனத்தைச் சேர்ந்த ஒரு வெறி பிடித்த ஆண் கும்பல் நிர்வாணமாக நடக்கச் செய்தும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியபடி வந்ததும் மக்களை வெகுண்டெழச் செய்தது.


மணிப்பூரில் நடந்து வரும் அட்டூழியங்களின் ஒரு துளியாக இது உலகுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கடும் கோபத்துடன் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். மணிப்பூரில் கலவரம் வெடித்தது முதல் வெளிப்படையாக இதுகுறித்து கருத்துக் கூறாமல் இருந்து வந்தார் பிரதமர். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து விமர்சித்து வந்தன. இந்த நிலையில் தான் பிரதமர் முதல் முறையாக இதுகுறித்து மீடியாவிடம் பேசியிருந்தார்.


இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்துக் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறுகையில், 80 நாட்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் முன்பு 80 விநாடிகள் மணிப்பூர் குறித்துப் பேசியுள்ளார் பிரதமர். ஆனால் நாடாளுமன்றத்துக்குள் ஒரு விநாடி கூட இதைப் பற்றி அவர் பேசவில்லை.  பிரதமர் அவையில் இதுகுறித்துப் பேச வேண்டும். உண்மை என்ன என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்.


ஆளுநர் சில கேள்விகளைக் கேட்டுள்ளார். உள்துறை அமைச்சகத்துக்கு தான் ஒரு அறிக்கை அனுப்பியதாக அவர் கூறியுள்ளார். அதில், 70 ஆயிரம் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். இப்படி ஒரு வன்முறை வெறியாட்டத்தை தான் பார்த்ததே இல்லை என்று அவர் கூறியுள்ளார். தனியார் சேனலுக்கு அவர் இவ்வாறு பேட்டி அளித்துள்ளார்.  இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். உள்துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலம் சென்று நிலவரம் குறித்து ஆய்வும் நடத்தியுள்ளார். ஆளுநர் இப்படிப் பேசுகிறார். இதுகுறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். உண்மை என்ன என்பதை விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மாணிக்கம் தாகூர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்