குடிமகனுக்கு மருமகனான கதை .. விஷாலின் விளையாட்டுகள் 4

Mar 28, 2026,02:30 PM IST

- பா.பானுமதி


விஷாலும் அவன் அம்மாவும் செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை உண்டு 


கடையில் நாள்தோறும் குடிமகன்கள் குடித்துவிட்டு அமைதியாகவும் சில நேரம் ஆர்ப்பாட்டமாகவும் தங்களுடைய காரியத்தில் கண்ணாயிருப்பர். ஒரு நாள் மாலை பள்ளியை விட்டு வீட்டுக்கு செல்லும்போது ஒரு குடிமகன் தள்ளாடியபடியே தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தான்


அவனைப் பார்த்ததும் விஷால் அம்மாவின் கையை விட்டு வேகமாக ஓடினான். இது என்னடா வம்பா போச்சு என்று விஷாலின் அம்மாவும் பதறியபடி விஷாலின் பின்னால் ஓடினாள் .


அங்கே நடந்த காட்சி.


குடிமகன் தன் இடுப்பில் செருகி இருந்த ஒரு பாட்டில் ஒன்று கீழே விழுந்து விட அதை எடுத்து விஷால் அவன் கையில் கொடுக்க அவனும் மகிழ்ச்சியில் திளைக்க... அங்கே நடந்த உரையாடல். 




"வாடா என் மாப்பிள்ளை எனக்கு பாட்டில் வாங்கி கொடுத்த தெய்வமே" என்று சொல்லியபடி விஷாலை இருக தழுவி கொண்டான். விஷாலும் நாத்தம் பிடித்தவன் தழுவலில் மயங்கி கிடக்க, பொறுக்காத அவன் அம்மாவும் 

"வாடா போகலாம்" என்று அழைக்க அதற்கு அந்த குடிமகனோ வராமல் தடுக்க கோபம் கொண்ட விஷாலின் அம்மா விஷாலை சத்தம் போட அவ்வளவுதான் குடிமகன் கோபத்தில் உச்சிக்கு போய் விட்டான்.

 

"ஏய் என் மருமகனை பெற்ற ஆத்தா என்று பார்க்கிறேன் இல்ல நடக்கிறதே வேற" 


"வீட்டுக்கு வாடா உன்னை வெளுக்கிறேன்" என்று விஷாலின் அம்மா கத்த...


"உங்க அம்மாவும் இப்படித்தான் உங்க அத்தையும் இப்படித்தான்டா.. மாப்பிள்ளையும் மாமாவும் சந்தோஷமா இருந்தா இவங்களுக்கு பொறுக்காது. என்ன பெத்த ராசா நீ போயிட்டு வாடா நாளைக்கு பாக்கலாம் உங்க அம்மா ஏதாவது சொன்னா என்கிட்ட சொல்லு நான் பாத்துக்கிறேன்" என்று குடிமகன் வசை பாட விஷாலின் அம்மா வேகவேகமாக விஷாலின் கையை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார்.

 

இப்படித்தான் குடிமகனின் மருமகனானான் விஷால்!


விஷாலின் விளையாட்டு தொடரும்.


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்