லட்சுமி மேனனுடன் திருமணமா.. "பெண்ணின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் .. விஷால் ஆவேசம்

Aug 11, 2023,11:18 AM IST
சென்னை: நான் நடிகை லட்சுமி மேனனைக் கல்யாணம் செய்து கொண்டதாக பரவி வருவது வெறும் வதந்தியே. அதைத் திட்டவட்டமாக மறுக்கிறேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இப்படியெல்லாம் விளையாடாதீர்கள் என்று வதந்தி பரப்புவோருக்கு விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் குறித்து ஒருசெய்தி பரவி வருகிறது. அவருக்கும் லட்சுமி மேனனுக்கும் இடையே கல்யாணம் ஆகி விட்டதாக அது இருந்ததால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செய்தியைத் தொடர்ந்து பலரும் இருவரிடமும் இதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். இதற்கு தற்போது விஷால் விளக்கம் கொடுத்துள்ளார்.



இந்த செய்தி தொடர்பாக விஷால் விடுத்துள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:

எந்த போலியான செய்திகளுக்கும், வதந்திகளுக்கும் பெரும்பாலும் நான் பதில் சொல்வதே கிடையாது. அப்படிச் சொல்வதால் எந்த பயனும் இல்லை என்பது எனது எண்ணம். ஆனால்  எனக்கும் லட்சுமி மேனனுக்கும் கல்யாணம் என்று வரும் செய்திகளை நான் சாதாரணமாக கடந்து போக விரும்பவில்லை. அதை  திட்டவட்டமாக அழுத்தம் திருத்தமாக மறுக்கிறேன்.  இதில் சற்றும் உண்மை இல்லை, அடிப்படை ஆதாரம் இல்லாதது.

இது ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. ஒரு நடிகை என்பதைத் தாண்டி அவர் முதலில் ஒரு பெண். பெண்ணின் வாழ்க்கையில் ஊடுறுவவோ அல்லது அதை அழிக்கவோ, தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடவோ, அவரது பெயரைக் கெடுக்கவே யாருக்கும் உரிமை இல்லை. இதனால்தான் இந்த வதந்தியை மறுக்கும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.

நான் யாரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன், எப்ப கல்யாணம், எங்கு கல்யாணம் என்பதையெல்லாம் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதற்கு இது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல.  கொஞ்சமாவது அறிவோடு நடந்து கொள்ளுங்கள். நேரம் வரும்போது,  எனது திருமணத்தை நானே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்.. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று கூறியுள்ளார் விஷால்.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்