- ந.தீபலட்சுமி
தமிழ்நாட்டில் ஏகப்பட்ட சுற்றுலாத்தலங்கள் உள்ளன. அதிலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏதாவது ஸ்பெஷல் பிளேஸ் இருக்கும். அப்படி திருவண்ணாமலையில் இருக்கும் அருமையான இடம்தான் இந்த சாத்தணூர் அணை.
சாத்தனூர் அணை (Sathanur Dam) என்பது தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பெரிய அணையாகும். 1958-ல் கட்டி முடிக்கப்பட்ட இது, விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதுடன், அழகான பூங்கா, முதலைப்பண்ணை, மீன் காட்சி, படகு சவாரி போன்ற சுற்றுலா அம்சங்களைக் கொண்ட ஒரு முக்கிய சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
இது மேட்டூர் அணை, பவானி சாகர் அணைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அணையாகும்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் இந்த அணை உள்ளது. தென்பெண்ணை ஆறு (பெண்ணையாறு) தான் இந்த இடத்தில் ஓடுகிறது.
கட்டப்பட்ட ஆண்டு: 1958.

அணையின் அருகே அமைந்துள்ள பூங்கா, குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், முதலைப்பண்ணை, மீன் கண்காட்சி, படகு சவாரி போன்றவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. பல திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்க் கொள்ளளவு சுமார் 7.3 டி.எம்.சி (TMC) நீர் கொள்ளளவு கொண்டது.
சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் என்று பார்த்தால், அழகுபடுத்தப்பட்ட மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், படகு சவாரி, மீன் கண்காட்சி மற்றும் முதலைப்பண்ணை ஆகியவற்றைச் சொல்லலாம்.
இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இந்த அணை கட்டும் திட்டம் முன்மொழியப்பட்டது. பின்னர், இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் கட்டுமானம் நிறைவு பெற்று, 1958-ல் அப்போதைய முதல்வர் காமராஜர் அவர்களால் திறக்கப்பட்டது
நான் பார்த்த சாத்தனூர் அணை:
இவ்வளவு சிறப்பு மிக்க சாத்தனூர் அணை,ஆங்காங்கே குப்பைகளும், பிளாஸ்டிக் பொருள்களும் நிறைந்திருப்பதைப் பார்த்த பொழுது சிறிது வருத்தமாகத் தான் இருந்தது.
அங்கு இருக்கும் அறிவியல் பூங்கா , பராமரிப்பின்றி உள்ளது.அங்கு வரும் மக்களுக்கு அது எதற்காக வைத்திருக்கிறார்கள்,அங்கு வைக்கப்பட்டிருக்கும் மாதிரிகளின் முக்கியத்துவம் மற்றும் அது செயல்படும் அறிவியல் தத்துவம் எதுவும் தெரியவில்லை என்பது மற்றொரு வேதனையான விஷயம் ஆகும்.
முறையாக பராமரித்தால் நம் மாணவர்களின் அறிவியல் அறிவை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த இடமாக இவ்விடம் திகழும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் - ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)
பொங்கல் பரிசுத் தொகுப்புடன்.. ரூ. 3000 ரொக்கமும் தரப்படும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
TAPS: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுத்த ஹேப்பி நியூஸ்.. அறிக்கையின் முழு விவரம்!
I am Coming.. திரும்பி போற ஐடியாவே இல்ல.. விஜய்யின் ஜனநாயகன் பட டிரைலர் எப்படி இருக்கு?
வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லத் தயாரா?... 150 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல்? நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் புதிய சாதனை
காவல்துறையினர் மரியாதை, புன்னகை, அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
திமுக தேர்தல் அறிக்கை: மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}