ஏப்ரல் 14.. சித்திரை 1.. விசுவாவசு தமிழ் புத்தாண்டு 2025 நல்வாழ்த்துக்கள்!

Apr 14, 2025,10:18 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஏப்ரல் 14ஆம் தேதி திங்கட்கிழமை சித்திரை சித்திரை மாதம் பிறக்கிறது. சித்திரையின் சிறப்பு சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை முதல் நாள். இந்த நன்னாள் ஸ்ரீமங்களகரமான விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு துவக்கம்.


இன்று 14 .04 .20 25 .எனவே தமிழர்கள் இந்த நாளை தமிழ் புத்தாண்டாக புத்தாடை அணிந்து ஆலய வழிபாடுகளிலும் வீட்டில் வழிபாடுகள் செய்தும் கொண்டாடி மகிழ்கின்றனர்.


பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும் .இந்த வரிசையில் 39 ஆவது ஆண்டின் பெயர் விசுவாவசு ஆகும். வடமொழி  நூல்களில் 60 ஆண்டுகளும் 60 சம்வத் சரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.




ஸ்ரீ விசுவாவசு என்றால் நேர்மையான பண்பாளர், தயாள சிந்தனை, செல்வந்தர் என்று பொருள். சித்திரை மாதம் வருடத்தின் முதல் பருவமான வசந்த காலத்தில் முதல் மாதம். வண்ண வண்ணமயமாக பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும்.


சித்திரை மாதத்தில் தான் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள். பகவத்கீதையில் பருவ காலங்களில் நான் வசந்த  நுதுவாக இருக்கிறேன், என்று சொன்னதால் பகவானின் மதிப்பிற்குரிய மாதமாகும் இந்த சித்திரை மாதம்.


தமிழ் புத்தாண்டு அன்று வழிபடும் நேரம்: காலை    9: 10 மணி முதல் 10 :20 மணி வரை .வீடுகளில்  இலை போட்டு  வழிபடும் நேரம் மதியம் 12 :30 மணி முதல் 1:30 மணி வரை.


கனி காணுதல் நிகழ்ச்சி:


இந்த ஆண்டு முழுதும் இன்பமும் ,நிறை செல்வமும், நீள் ஆயுளும், உயர் புகழ் பெற காலை கண் விழித்ததும் கண்ணாடி முன் முக்கனிகள் :அதாவது மா, பலா ,வாழை வைத்து வழிபடுவது சிறப்பு. அல்லது வீட்டில் இருக்கும் பழங்கள் மேலும் அரிசி பருப்பு, உப்பு ,சர்க்கரை அல்லது கற்கண்டு, நாணயங்கள் ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயங்கள் வைத்து வழிபடுவார்கள். தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களும் வைத்து வழிபடுவார்கள். இது அவரவர் நிதி  நிலைமைக்கு ஏற்பவும், குடும்ப சூழலுக்கு ஏற்பவும் அமைகிறது.


சில வீடுகளில் கலசம் வைத்து மகாலட்சுமி பூஜை செய்வார்கள். மஞ்சள் நிற மலர்கள் வைத்து அலங்கரித்து குலதெய்வத்தை மனதார நினைத்து பூஜை செய்வது சிறப்பு .அறுசுவை உணவு சமைப்பது நன்று. இனிப்பு, புளிப்பு , துவர்ப்பு , துவர்ப்பு, காரம் ,கசப்பு சுவையுள்ள உணவு சமைப்பர். இவை அனைத்தும் சேர்த்து பானகமாக செய்து நைவேத்தியமாக வைத்து வழிபடுவர் .சமையலில் வேப்பம்பூ ரசம், மாங்காய் பச்சடி ,படையலுக்கு சாதம், சாம்பார் ,வடை ,பாயாசம் என அவரவர் வீட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப செய்வது நன்று .மஞ்சள் கொம்பு, மஞ்சள் &குங்குமம் , மஞ்சள் நிற பூக்கள் ,நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது ஆண்டு முழுதும் சுபிட்சமாக வாழ வழிவகுக்கும்.


மேலும் தென்தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் விசுவாவசு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்