திருவனந்தபுரம்: இந்தியாவின் கடல் வா்த்தகத்தில் ஒரு புதிய அத்தியாயமாக மலர்ந்துள்ளது விழிஞ்ஞம் துறைமுகம்.
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது கேரளாவின் கடல் சாா்ந்த அடையாளத்தை உலக வரைபடத்தில் உயா்த்தும். இந்தத் திட்டம் இந்தியாவின் வா்த்தகத்தையும், கப்பல் போக்குவரத்தையும் மேம்படுத்தும்.
இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக முதலீடு இது. இதில் மூன்றில் இரண்டு பங்கு கேரள அரசு முதலீடு செய்துள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சியில் புதிய அத்தியாயமாக மாறியுள்ளது. 8,867 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விழிஞ்ஞம் , இந்தியாவின் முதல் சரக்கு மாற்று துறைமுகம். இது நாட்டின் முதல் அரை-தானியங்கி (செமி ஆட்டோமேட்டிக்) துறைமுகம் ஆகும். இது முக்கியமான சர்வதேச கப்பல் பாதையில் இருந்து 10 கடல் மைல் தூரத்தில் உள்ளது. ஆழமான நீர் இருப்பதால் பெரிய கப்பல்கள் எளிதாக வரலாம். இதுவரை இந்தியாவின் சரக்கு பெட்டகங்களில் 75% கொழும்பு துறைமுகத்தில் கையாளப்பட்டன. இதனால் இந்தியாவுக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டது. விழிஞ்ஞம் துறைமுகம் அந்த போக்குவரத்தை இந்தியாவுக்கு திருப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலேயே ஒரு மாநில அரசு செய்த அதிக முதலீட்டைக் கொண்டுள்ளது என்றால் அது விழிஞ்ஞம் துறைமுகம் தான். கேரள அரசு மொத்த திட்ட செலவில் மூன்றில் இரண்டு பங்கை ஏற்றுள்ளது. துறைமுகம் எந்த காலநிலையிலும் செயல்பட உதவும் அலை தடுப்பு சுவரின் முழு செலவையும் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. விழிஞ்ஞத்தில் உள்ள அலை தடுப்பு சுவர் இந்தியாவில் மிக ஆழமானது. இது சுமார் மூன்று கிலோமீட்டர் நீளம் கொண்டது. 28 மீட்டர் உயரத்தில், இது ஒரு பெரிய பொறியியல் சாதனை. சோதனை ஓட்டம் ஜூலை 13, 2024 அன்று தொடங்கியது. முழு வணிக செயல்பாடு டிசம்பர் 3, 2024 அன்று தொடங்கியது. மூன்று மாத சோதனை காலத்தில் 272 பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் நின்றன. 550,000-க்கும் அதிகமான சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டன.
விழிஞ்ஞம் துறைமுகத்தில் தானியங்கி கிரேன்கள் உள்ளன. கப்பலில் இருந்து கரைக்கு சரக்குகளை ஏற்றி இறக்க ரிமோட் மூலம் இயக்கப்படும் கிரேன்களும் உள்ளன. இது பாதுகாப்பான மற்றும் வேகமான செயல்பாட்டை உறுதி செய்கிறது. IIT மெட்ராஸுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் AI திறன் கொண்ட கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பும் இதில் உள்ளது.
தெற்காசியாவின் முக்கிய துறைமுக மையமாக விழிஞ்ஞம் மாறுகிறது. 2028 ஆம் ஆண்டளவில், கட்டுமானத்தின் அடுத்த கட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துறைமுகத்தின் ஆண்டு சரக்கு கையாளும் திறன் 3 மில்லியன் TEU-ஆக அதிகரிக்கும். இந்த கட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் செலவாகும். இதை அதானி போர்ட்ஸ் முழுமையாக வழங்கும்.
விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 66-க்கு நேரடி சாலை வசதி உள்ளது. எதிர்கால சரக்கு வளர்ச்சியை கையாள கேரளாவின் முதல் cloverleaf interchange இங்கு உள்ளது. துறைமுகத்தை தேசிய ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கும் ரயில் பாதை விரைவில் கட்டப்படும்.
இந்த வளர்ச்சிகளுடன், விழிஞ்சம் தெற்காசியாவின் முக்கிய வா்த்தக நுழைவாயிலாக மாறும். இந்தியாவின் கடல் வலிமையின் பெருமைமிகு அடையாளமாக இருக்கும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
Vizhinjam Port: விழிஞ்ஞம் துறைமுகம்.. இந்தியா மற்றும் கேரளாவின் வர்த்தக வளர்ச்சியில் புது அத்தியாயம்
நேஷனல் ஹெரால்டு வழக்கில்.. சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு.. டெல்லி கோர்ட் நோட்டீஸ்
3, 5,8 வகுப்பு மாணவர்களை.. fail ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ்
பாகிஸ்தான் வான்வெளி மூடப்படுவதால்.. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு $600 மில்லியன் இழப்பு!
வெயிலிலிருந்து தப்ப.. நீண்ட நேரம் AC இயக்கினால்.. என்னென்ன பிரச்சினையெல்லாம் வரும் தெரியுமா?
மதுரை சித்திரை திருவிழா... 4ம் தேதி முதல் பொருட்காட்சி.. 45 நாட்களுக்கு!
என் இதயமே.. மீண்டும் ஒரு காதல் கதையில் ஷிகர் தவான்.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்துகள்!
பயணிகளின் கோரிக்கையை ஏற்று.. புறநகர் ஏசி ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தெற்கு ரயில்வே!
வாழ்த்து மழையில் நனையும்.. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.. கொண்டாடும் ரசிகர்கள்!
{{comments.comment}}