2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்

Aug 23, 2025,04:35 PM IST

சென்னை: 1977ல் எம்ஜிஆர் ஆட்சியை பிடித்த காலம் வேறு, இப்போதுள்ள காலம் வேறு. 2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


கடந்த 21ம் தேதி தவெக கட்சியின் 2வது   மாநில மாநாடு மிகப்பிரம்மாண்டமாக மதுரை பாரபத்தியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு இன்று வரை அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியதுடன், ஒவ்வொரு கட்சியினரும் தங்களுடை விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில், இன்று  விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திருமாவளவன், ஓரிடத்தில் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வது என்பது, திரைப்படத்தில் புகழ் பெற்ற, செல்வாக்கு பெற்ற கதாநாயகர்களுக்கு இயல்பான ஒன்றுதான். ஆந்திராவில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் அதைப்போல தமிழகத்தில் பல தலைவர்கள் இன்றைக்கு நாம் விஜயகாந்த் உட்பட விஜய் வரையிலும் பார்க்கிறோம். ஆனால் அவர்களால் கடைசி வரை தாக்குபிடித்து நிற்க முடியாது.




ரசிகர் பட்டாளம் வேறு, அரசியல் விழிப்புணர்வு பெற்ற களப்பணியாளர்கள் என்பது வேறு. ஆட்சியை கைப்பற்ற சில லட்சம் பேர் போதாது. 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் பேர் ஒரு இடத்திலே திரண்டால் உங்களுக்கு பிரமிப்பை உருவாக்கும். ஆனால் அது ஆட்சிக்கு பயன்படாது. அதை வைத்து நாம் ஆட்சி மாற்றமே நிகழ்ந்துவிடும் என சொல்ல முடியாது. கட்சி தொடங்கி இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டு மாநில மாநாடுகளை நடத்தி இருக்கிறார்கள். 


மாநாடுகளுக்கு ஒன்றாவது மாநாடு இரண்டாவது மாநாடு என்றுதான் அதற்கு பெயர் சூட்ட முடிந்ததை தவிர, கருத்தியல் சார்ந்து அந்த மாநாட்டுக்கு பெயர் சூட்ட முடியவில்லை. அந்த மாநாட்டில் சித்தாந்த தெளிவு இல்லை. நாங்கள் மாநாடு நடத்துகிறோம் எனில், வெல்லும் ஜனநாயக மாநாடு, தேசம் காப்போம் மாநாடு, மது ஒழிப்பு மாநாடு, அரசியலமைப்பு சட்டத்தை காப்போம் என்கிற பெயரில் மாநாடுகளை நடத்துவோம். அதில் ஒரு கருத்து இருக்கும். ஆனால் வெறுமென ஒரு எண்ணை மட்டும் வைத்து மாநாடு போடுவதால், கருத்தியல் ரீதியாக அவர்களால் பொருந்த முடியவில்லை என்று அர்த்தம்.


தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டகம் குறித்தும், நாடு முழுவதும் இருக்கும் ஆணவ கொலைகள் குறித்தும், பெரியார், அம்பேத்கர் எதற்காக பாடுபட்டார்கள் என்பது குறித்து மாநாட்டில் எதுவும் பேசப்படவில்லை. எனவே சித்தாந்த ரீதியில் அவர்கள் இன்னும் தெளிவான இடத்திற்கு வரவில்லை. விஜய் மாநாட்டில் கருத்தியல் இல்லை. 1977-ல் எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்த காலம் வேறு; இப்போதுள்ள காலம் வேறு: 2026- தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது


விஜய் நடத்திய மாநாட்டில் அதிகபட்சமாக ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிற வேட்கை தெரிகிறது. எனவே திமுகவை வீழ்த்துவோம் என்கிற வெறுப்பு தெரிகிறது. மற்றபடி தவெக மாநாடு அரைத்த மாவையே அரைத்த மாநாடாகத்தான் தெரிகிறது. கடந்த மாநாட்டுக்கும் இந்த மாநாட்டுக்கும் இடையில் ஒரு மேம்பாடு இருந்திருக்க வேண்டும். நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்கிற தெளிவு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

ரஜினியை சந்தித்த சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு... இணையத்தில் வைரல்!

news

2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்

news

வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!

news

வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

news

2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்