சென்னை: கோட் படத்தில் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை பாட வைத்தது போல இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஒலிக்க வைத்துள்ளனர். இதை அதிகாரப்பூர்வமாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
செயற்கை நுன்னணறிவு தொழில்நுட்பம் வந்தாலும் வந்தது எதை எடுத்தாலும் ஏஐ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். முதலில் உருவத்தில் ஆரம்பித்த இந்த ஏஐ தொழில்நுட்பம் இப்போது இல்லாதவர்களின் குரலையும் கூட பேச வைக்கும் அளவுக்கு மாறி விட்டது. இப்போது என்ன வேண்டுமானாலும் இந்த தொழில்நுட்பத்தால் செய்ய முடியும் என்பதை விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கும் கோட் படம் நிரூபித்துள்ளது.

இந்தப் படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உருவத்தைக் கொண்டு வந்து காட்டி அசத்தி விட்டனர். அதேபோல மறைந்த பாடகி பவதாரணியின் குரலையும் ஒரு பாடலுக்கு ஒலிக்க வைத்து அனைவரையும் வியக்க வைத்து விட்டனர். ஒரே படத்தில் இரண்டு விதமான அசத்தல் தொழில்நுட்ப சாதனையை செய்து மிரள வைத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இந்த வரிசையில் இப்போது வேட்டையன் படத்திலும் இதேபோல ஒரு டெக்னாலஜியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இபபடத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது. இந்தப் பாடலை ஒரு பிரபலமான லெஜன்டரி சிங்கர் பாடியிருக்கிறார் என்று கூறியிருந்தது படக் குழு. அதாவது மிகப் பிரபலமான அந்தப் பாடகரின் குரல் இடம் பெற்றிருப்பதாக லைக்கா நிறுவனத்தின் எக்ஸ் தளப் பதிவில் சொல்லப்பட்டது. இதையடுத்து அது யார் என்ற சுவாரஸ்யமான விவாதம் கிளம்பியது.
சிலர் எஸ்பிபி என்று சொன்னார்கள். ஆனால் பலரது கருத்து இது மலேசியா வாசுதேவன் குரல்தான்.. பாடலைப் பார்த்தாலே ஈஸியாகத் தெரிகிறதே என்று குதூலகித்தார்கள். இப்போது அதை உறுதிப்படுத்தி விட்டது லைக்கா. மலேசியா வாசுதேவனின் குரலில்தான் இந்தப் பாடல் ஒலிக்கப் போகிறதாம். கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப் பிறகு ரஜினிக்காக மலேசியா வாசுதேவனின் குரல் பாடப் போகிறது.
ரஜினிகாந்த்துக்கு மிக மிக பொருத்தமான குரல் மலேசியாவின் குரல். எஸ்பிபியைப் போலவே மலேசியா வாசுதேவனும் ரஜினிக்காக பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். மாவீரன் படப் பாடல்கள், முரட்டுக்காளை படப் பாடல் என பெரிய லிஸ்ட்டே போடலாம். அப்படிப்பட்ட அபாரமான குரலில் மீண்டும் ரஜினி பாடல் வரப் போவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
வங்கதேச மக்களுக்காக... 17 ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கிய முன்னாள் பிரதமரின் மகன்!
போராட்டங்கள் பல.. இறுதியில் அழகான வெற்றி.. After the Struggle, I Shine !
ஆயிரம் முகங்களை கடந்த பயணத்தில்.. Express the emotion getting someone
ஒரு பேனாவின் முனுமுனுப்பு.. The Whisper of the PEN
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
அரசியல் பேசத் தடை...நாளை ஜனநாயகன் ஆடியோ விழாவில் விஜய் என்ன பேசுவார்?
{{comments.comment}}