சென்னை: ஆக்சிஜன் ஜெனரேட்டருடன் வந்து வாக்களித்துள்ளார் சென்னையை சேர்ந்த 72 வயதான வாக்காளர் ரகுநாதன்.
தமிழத்தில் 39 தொகுதிகளும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்தாண்டு குறிப்பாக முதியவர்கள் வாக்கு செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த வயதுடையவர்களை விட சீனியர் சிட்டிசன்கள் தான் அதிக ஆர்வத்தில் வாக்களித்து வருகின்றனர். 102, 85, 70 என அதிக வயதுடையோர் பலர் வாக்களித்துள்ளனர். இப்படி ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் 72 வயதுடைய ரகுநாதன் என்பவர் ஆக்சிஜன் ஜெனரேட்டருடன் வந்து வாக்களித்து, வாக்களிக்க வாய்ப்பு இருந்தும் வாக்களிக்காமல் இருப்பவர்களுக்கு உதாரணமாக விளங்கியுள்ளார்.
சென்னையை சேர்ந்த இவர் உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் உடலில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் பொருத்தியுள்ளார். அத்துடன் வந்து தனது வாக்கினை வரிசையில் நின்று செலுத்திவிட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், நாட்டின் நலனுக்காக அனைவரும் வாக்களியுங்கள். போன அசெம்பிளி எலக்சன்லையும் வந்து போட்டிருக்கேன். ஓட்டு போடனும்னு ஒரு தீர்மானத்தோட வந்திருக்கேன்.
என்னோட விருப்பத்த தெரிவிக்கனும் என்று வந்து ஓட்டு போட்டுருக்கேன். கூடிய மட்டும் வயதானவர்களும் சரி அனைவரும் வந்து ஓட்டு போடனும்னு சொல்லி ரெக்வஸ்ட் பண்ணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}