திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமான நிகழ்வு தான் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு 75 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மண்டல பூஜைக்கு 15 நாட்கள் மட்டுமே உள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எரிமேலி, கன்னமாலா, லாஹா உள்ளிட்ட பகுதிகளில் எட்டு மணி நேரத்திற்கு அதிகமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பம்பை மணப்புரம் பகுதிகளில் 4 மணி நேரம் காத்திருந்த பிறகு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகிறார்கள். பம்பையில் இருந்து சன்னிதானம் செல்வதற்கு 14 மணி நேரம் ஆவதாக தெரிவித்து வருகின்றனர் பக்தர்கள்.
இது குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், சபரிமலை விஷயத்தில் அரசின் களப்பணிகள் மிகவும் கவனத்துடன் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெரிய மாற்றகள் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு சபரிமலை சீசனை ஒட்டி பாதுகாப்பு பணியில் 16 ஆயிரத்து 70 காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு 16 ஆயிரத்து 120 பேர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக ரூபாய் 108 கோடியில் செங்கன்னூர், சிரங்கரை, எருமேலி, நிலக்கல், கழக்கூட்டம், மணியம் கோடு ஆகிய ஆறு இடங்களில் ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை மழை வெள்ளம், தெலுங்கானா தேர்தல் காரணமாக சபரிமலை பயணித்து ஒத்தி வைத்திருந்தவர்களும் தற்போது தரிசனத்திற்கு வர தொடங்கி இருக்கிறார்கள். கூட்டம் நெரிசலுக்கு இதுவும் காரணமாக இருக்கலாம். இதை எல்லாம் கருத்தில் கொண்டு தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தொடர்ந்து முதல்வர் கூறுகையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நாள்தோறும் சராசரியாக 62 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனத்திற்கு வந்திருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 88 ஆயிரமாக உயர்ந்துள்ளது. புல்மேடு, எருமேலி காட்டுப்பாதை வழியாக பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்றார் அவர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}