- சுதாகரி
காத்திருக்கிறேன்
பூஞ்சோலையில்
தென்றலாய் நீ வருவாய் என
விழித்திருக்கிறேன்
நள்ளிரவில்
நிலவாய் குளிர் தருவாய் என!
பார்த்திருக்கிறேன்
பாதையெல்லாம்
எனக்காக நீ வருவாய் என
பஞ்சு மெத்தை விரித்துள்ளேன்
உன் பாதம் நோகுமென!

பைந்தமிழ் பா வடித்தேன்
இசையாக நீ வேண்டுமென
பண்ணோடு பாடி வந்தேன்
இணையாய் நீ வருவாய் என!
விழியெல்லாம் தேக்கி வைத்தேன்
என் பார்வையாய் நீ வேண்டுமென
விண்வெளியைச்
சுற்றி வந்தேன்
என் ஆகாயம் நீ என!
மனிதனாய் நான் மாறவும்
மனதை தேற்றிக் கொண்டேன்
மனிதமாய் என் மனதில்
நீ இருக்க சம்மதித்தால்!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}