இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
2012-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது, ஷாருக் கான் தன் அணியின் வீரர்கள் சோர்வடையாமல் இருக்க ஒரு போயிங் விமானத்தையே ஏற்பாடு செய்தார். ஷாருக் கான் KKR அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாசிம் அக்ரம் 2010 முதல் 2016 வரை KKR அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார். அந்த அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றபோது அவர் முக்கிய பங்காற்றினார்.
வாசிம் அக்ரம் VU ஸ்போர்ட்ஸ் உடனான உரையாடலில் இந்த சம்பவம் குறித்து விவரித்துள்ளார். 2012 ஐபிஎல் சீசனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நாக் அவுட் போட்டியில் விளையாட இருந்தது. போட்டி கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. வீரர்கள் களைப்படையாமல் இருக்க ஷாருக் கான் ஒரு போயிங் விமானத்தையே ஏற்பாடு செய்தார்.
இதுகுறித்து வாசிம் அக்ரம் மேலும் கூறுகையில், 2012 ஐபிஎல் சீசனில் இது நடந்தது என்று நினைக்கிறேன். எங்கள் நாக் அவுட் போட்டி கொல்கத்தாவில் இருந்தது. நாங்கள் எங்கிருந்தோ வர வேண்டியிருந்தது. ஷாருக் கான் அங்கு இருந்தார். அதனால் நான் அவரிடம், Mr கான், ஒரு வேண்டுகோள். டீம் ரொம்ப டயர்டாக இருக்கிறது. நாங்கள் நாளை போக வேண்டும். நாளை மறுநாள் போட்டி. தனியாக ஒரு பிளேன் ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கேட்டேன்.
அப்படிங்கிறீங்களா.. நோ பிராப்ளம் ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு பிளேன் ரெடி செய்கிறேன்.. ஓகேவா என்று கூறியதும் எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. தயங்கித் தயங்கி கேட்டதற்கு அவர் உடனடியாக ஏற்பாடு செய்வதாக கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் சொன்னபடியே ஒரு மணி நேரத்தில், முழு போயிங் விமானமும் அணி வீரர்கள் அனைவருக்காகவும் தயாராக இருந்தது என்றார் வாசிம் அக்ரம்.
2012 ஆம் ஆண்டு KKR அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி IPL கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. ஷாருக் கான் தன் அணி வீரர்களுக்காக எதையும் செய்யத் துணிந்தவர் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}