சென்னை: குமரி கடல் பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது.இதனால் பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தில் அநேக இடங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் நெல்லை, தென்காசி, இராமநாதபுரம், சிவகாசி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழை காரணமாக தென்காசி நெல்லை ராமநாதபுரம் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக அருவிகள் மற்றும் நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி
நெல்லை:
நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது அதே சமயம் கனமழை காரணமாக களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குமரி கடல் பகுதியில் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மழை நின்ற பிறகு அப்பகுதிகளில் படகு சேவை தொடங்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
குற்றால அருவி:
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் பாதுகாப்பு கருகி மெயின் அருவிகளில் அதிகாலையிலேயே குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பழைய குற்றால அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குற்றால அருவிகளுக்கு வந்து குளிக்க கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆஹா சூப்பர் ருசி -- மரவள்ளி கிழங்கு சுழியம்!
சுவையான மோர்க்குழம்பு.. வச்சு சாப்பிட்டுப் பாருங்க.. மறக்கவே மாட்டீங்க!
மாதவிடாய் வலியா.. இடுப்பு வலியா.. இருக்கவே இருக்கு பாரம்பரிய வைத்தியம்!
நன்றியுணர்வு மலரட்டும்.. Gratitude in Bloom: Don't Take Your Parents for Granted
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம்.. புதிய தாக்குதலில் இறங்கிய ரஷ்ய ராணுவம்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
ராத்திரி 11 மணியானா போதும்.. இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்வது இதைத்தானாம்!
பிரம்மாண்ட ப்ளூபேர்டை லாவகமாக கொண்டு சென்ற பாகுபலி!
{{comments.comment}}