சென்னை: சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 21 முதல் 26 வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி சேமித்து வைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை பெருநகரங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும், பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.
ஏனெனில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் குழாய்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய காலங்களில் மக்கள் குடிநீரை வீணாக்காமல் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதற்கான அறிவிப்பை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,சென்னையில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நெம்மேலியில் அமைந்துள்ள ஒரு நாளைக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மார்ச் 21 முதல் 26 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
குறிப்பாக, மார்ச் 21, 23, 25, ஆகிய தேதிகளில் திருவான்மியூர், கொட்டிவாக்கம் ஈச்சம்பாக்கம், வெட்டுவான்கேணி, கொட்டிவாக்கம், நீலாங்கரை, உத்தண்டி, ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
அதேபோல் மார்ச் 22, 24, 26, ஆகிய தேதிகளில் பாலவாக்கம், காரப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர், ஒக்கியம் துரைப்பாக்கம், ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். குறிப்பிட்ட தேதிகள் நீங்கலாக, குடிநீர் விநியோகம் மாற்று நாட்களில் வழங்கப்படும்.
இந்த நாட்களில் குடிநீர் விநியோகம் அவசியமான காலகட்டங்களில், டயல் பார் வாட்டர் அல்லது https://cmwssb.tn.gov.in/என்ற இணையதளத்தை பயன்படுத்தி குடிநீர் டோக்கன்களை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில் எந்த தடையும் இன்றி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதே சமயத்தில் சென்னையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி சேமித்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}