வயநாடு நிலச்சரிவில் சிக்கி.. 9 தமிழர்கள் பலி.. ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான பரிதாபம்

Jul 31, 2024,07:55 PM IST

திருவனந்தபுரம்:  வயநாடு நிலச்சரிவில் சிக்கி காளிதாஸ், கல்யாணகுமார், ஷிஹாப் ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 6 பேர் இறந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.


கேரள மாநிலம்முண்டக்கை என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 168 பலியாகியுள்ளனர். மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கிய 216 பேரை காணவில்லை என கேரள அரசு தெரிவித்துள்ளது. 2வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.


இந்நிலையில், இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 9 பேர் இதுவரை உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த 34  வயதான காளிதாஸ், கட்டுமான பணிக்காக கேரள மாநிலம் சென்றிருந்த காளிதாஸ் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்துள்ளார். இதேபோல நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரங்கோடு பகுதியைச் சேர்ந்த கல்யாண் குமார், ஷிஹாப் ஆகியோரும் இறந்துள்ளனர்.




அதேபோல முண்டக்கை மேப்பாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். கல்யாணகுமார் என்பவரின் குடும்பத்தில்  6 பேர் பலியானதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், " கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் பணியாற்றி வந்த நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் சேரங்கோடு ஒரு கிராமம் கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முருகையா என்பவரது மகன் கல்யாணகுமார் வயது 52. 


அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிர் இழந்த கல்யாண குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காலம் சென்ற கல்யாணகுமாரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஜம்மு காஷ்மீரை உலுக்கி எடுத்த கன மழை.. வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற 5 பக்தர்கள் பலி

news

தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு

news

திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?

news

சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் ரவி மோகன்... இயக்குனராகவும் அவதாரம்!

news

அது என்ன 39% ஓட்டுக் கணக்கு.. அமைச்சர் அமித்ஷா சொன்னது இதைத் தானா?

news

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம்.. காலை உணவுத் திட்ட விரிவாக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

பிள்ளையார் பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்!

news

குருதிப்பூக்கள் (சிறுகதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்