வயநாடு நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு.. ராணுவ சீருடையில் வந்த நடிகர் மோகன்லால்!

Aug 03, 2024,11:50 AM IST

வயநாடு:   வயநாடு மாவட்டம் நிலச்சரிவால், கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இன்று முண்டக்கை பகுதிக்கு நடிகர் மோகன்லால் ராணுவ சீருடையில் வந்து பார்வையிட்டார்.


வயநாடு பகுதியில் உள்ள முண்டக்கை மற்றும் சூரல் மலை பகுதிகளில் கடந்த செவ்வாய் கிழமை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு கிராமமே மண்ணோடு மண்ணாக தரைமட்டமானது. இதில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 250 க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மீட்பு பணிகளில் முப்படை வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், கடற்படை, வனத்துறை, காவல் படை வீரர்கள், ராணுவ வீரர்கள் என மொத்தம் 2000 க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை மற்றும் சூரல் மலைப்பகுதியில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது‌.அதன் வழியாக தற்போது நிலச்சரிவில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். 




இந்த மீட்புப் பணியில் மையில்கல்லாக அமைந்த டெய்லி பாலத்தை பெண் ராணுவ அதிகாரி மேஜர் சீதா அசோக் ஹெல்கே, 144 பேர் கொண்ட குழுக்களை சிறப்பாக வழி நடத்தி 31 மணி நேரத்தில் டெய்லி பாலத்தை அமைத்து அசத்தினார். இதனால் மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதான சீதா அசோக் ஹெல்கே வை கேரள மக்கள் பாராட்டி வருகின்றனர்.


இந்த நிலையில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க மீட்புப் பணியினர் ஐந்தாவது நாளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இருப்பினும் தற்போது  மண்ணில்  புதைந்த உடல்களை மீட்பது பெரும் சவாலாகவே உள்ளது. அதிநவீன தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தி மண்ணில் புதைந்த உடல்களை தேடும் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த தெர்மல் ஸ்கேனர் கை கொடுக்குமா என பலரும் அச்சத்தில் உள்ளனர்.


இந்த தெர்மல்ஸ் ஸ்கேனருடன் உள்ள கேமராக்கள் மண்ணில் உள்ள விலங்குகள் மற்றும் மனிதர்களை காட்டிக் கொடுக்க உதவும். மனிதனின் வெப்பநிலையை வைத்தே கண்டறிந்து புகைப்படங்களை கொடுப்பது தெர்மல் ஸ்கேன்களின் சிறப்பு. சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் ஏற்படும் இயற்கை சேதங்களை துல்லியமாக  கணக்கிடவும், உயிர்பிழத்தவர்களை கண்டறியவும் அபாயகரமான சூழ்நிலையை விளக்கவும் இவை உதவுகின்றன. குறிப்பாக மண்ணுக்கு அடியில் மூன்று கிலோ மீட்டர் வரை புதைந்த உடல்களை கண்டறிய இவை பேருதவி புரிகின்றன.


அந்த வகையில் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மேப்பாடி, சூரல் மலை, போன்ற பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கிய உயிரிழந்தவர்களின் நிலையை கண்டறியவும் மண்ணில் புதைந்த உடல்களை மீட்கவும் இந்த தெர்மல் ஸ்கேனர்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இதற்கிடையே கேரளா சென்றுள்ள தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழு முழு வீச்சுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. தவிக்கும் கேரள மக்களின் நிலையறிந்து அவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இதனை அங்கு கூறவும் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நடிகர் மோகன்லால் வருகை




இதற்கிடையே, இன்று பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதிக்கு நடிகர் மோகன்லால் வருகை தந்தார். ராணுவத்தில் கெளரவப் பதவியில் உள்ள அவர் ராணுவ சீருடையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார். அவருக்கு மீட்புப் பணிகள் குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மோகன்லால் பார்வையிட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்