வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணி 10வது நாளாக தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக நேற்று சன்ரைஸ் பள்ளத்தாக்கில் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் இன்று அங்கு தீவிர சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாம்.
பருவமழை தீவிரமடைந்தால் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல் மலை, மேப்பாடி போன்ற சிறிய கிராமங்களில் அதி பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் தரைமட்டமானது. அங்கு வசித்து வந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கின. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 413 பேர் உயிரிழந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட 1968 பேர் 16 முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி உறவினர்களையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் முகாம்களில் உள்ளவர்களை மறுவாழ்வுக்காக வாடகை வீடுகளில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வயநாடு நிலச் சரிவில் இதுவரை காணாமல் போனவர்களை தேடும் பணி பத்தாவது நாளாக நீடித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் நேற்று சன்ரைஸ் பள்ளத்தாக்கில் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் இன்று மேலதிக சோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}