வயநாடு : கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களைத் தேடிப் போய் சூச்சிப்பாறை அருவிப் பகுதியில், சிக்கிக் கொண்ட 3 இளைஞர்களை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கேரள மாநில வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30ம் தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். தொடர்ந்து 5 நாட்களாக வயநாட்டில் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 346 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய மேலும் 250 க்கும் அதிகமானவர்களை காணவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், கேரளாவில் இன்னும் மழை குறைந்த பாடில்லை. மண்ணில் புதைந்த பலரது உடல்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மண்ணில் புதைந்தவர்களின் உடல்களை மோப்ப நாய்கள், ஜிபிஎஸ் ஆகியவற்றின் உதவியுடன் மீட்கும் பணிகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடி மலப்புரத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சூச்சிப்பாறை அருவிப் பகுதிக்குச் சென்று அங்கிருந்து திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர். பாறைகளின் மீது ஏறி தங்கி உயிர் தப்பியுள்ளனர். தொடர்ந்து தங்களைக் காக்க மீட்புப் படையினர் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திரு்நதனர். இவர்களை 5 நாட்களுக்கு பிறகு தான் கடலோர காவல் படையினர் கண்டறிந்துள்ளனர். சுற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாறைகளின் மீது அமர்ந்து, 5 நாட்களாக உணவு தண்ணீர் இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரையும் மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டது.
தற்போது இந்த மூ்ன்று பேரையும் கயிறு மூலமாக மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு ராணுவ மீட்புப் படையினர் கொண்டு வந்தனர். பின்னர் 3 பேரும் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து மீட்டுக் கொண்டு செல்லப்பட்டனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}