உ.பியின் ரேபரேலியிலும் ராகுல் காந்தி மனுத்தாக்கல்.. வயநாட்டு மக்களின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

May 05, 2024,08:49 AM IST

திருவனந்தபுரம் : 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.  காங்கிரசின் கோட்டையாக இருந்த அமேதியில், பாஜக.,வின் ஸ்மிருதி இராணியிடம் தோல்வியை சந்தித்தார். அதே சமயம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று, எம்.பி., ஆனார்.


நடைபெற்று வரும் 2024 லோக்சபா தேர்தலில் அமேதியில் போட்டியிடாமல் வயநாட்டில் மட்டும் தான் ராகுல் காந்தி போட்டியிட போகிறார் என சொல்லப்பட்டு, அவரும் வயநாட்டில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். அங்கு தேர்தலும் முடிந்து விட்டது. தற்போது திடீரென புதிய திருப்பமாக  உ.பி.,யில் உள்ள தனது அம்மா சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் ராகுல் காந்தி. ஏற்கனவே அமேதி தொகுதியில் தோல்வி பயம் காரணமாக தான், ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.


வயநாட்டில் ஏப்ரல் 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த சமயத்தில் ரேபரேலியிலும் அவர் மனுதாக்கல் செய்துள்ளது பற்றி வயநாட்டில் பலவிதமான கருத்துக்கள் மக்களிடம் நிலவி வருகிறது. ராகுல், ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுவதில் எந்த தவறும் இல்லை என சிலர் கூறுகிறார்கள். பிரதமர் மோடி, இதற்கு முன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவில்லையா என சிலர் கேட்டு வருகிறார்கள். ஆனால் சிலர் இதை தவறு என விமர்சித்து வருகிறார்கள். 



வயநாட்டில் இந்த முறை ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அன்னி ராஜாவும், பாஜக சார்பில் கே.சுரேந்திரனும் போட்டியிட்டனர்.  ராகுல் காந்தி, இரண்டு தொகுதிகளிலுமே வெற்றி பெற்றால் வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்து விட்டு, ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக் கொள்வார் என சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு வேளை ராகுல் காந்தி அப்படி செய்தால் வயநாடு மக்களின் கடுமையான எதிர்ப்பை காங்கிரஸ் சந்திக்க வேண்டி வரும், இது அடுத்து வரப் போகும் சட்டசபை தேர்தலில் காங்கிரசிற்கு பெரும் பின்னடைவை கொடுக்கும்.


இது ஒரு பக்கம் இருந்தாலும், பிரதமர் மோடி விமர்சித்தது போல், தோல்வி பயம் காரணமாக தான் ராகுல் காந்தி கடைசி நேரத்தில் முடிவை மாற்றி ரேபரேலி தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்திருப்பதாகவும் பாஜகவினர் பேசி வருகின்றனர். அமேதியில், ஸ்மிருதி இராணியின் பலம் கடந்த தேர்தலை விட அதிகரித்திருப்பதால் இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட்டால் மீண்டும் தோல்வியை தான் சந்திக்க வேண்டும் என்று, பாதுகாப்பாக வயநாட்டிலேயே மீண்டும் போட்டியிட முடிவு செய்தார் ராகுல் காந்தி என்று சொல்கிறார்கள். ஆனால் வயநாட்டில் இடதுசாரிகள் மற்றும் பாஜக இரு கட்சிகளும் ராகுல் காந்திக்கு கடும் போட்டியை தந்துள்ளனர். இதனால் வயநாட்டில் ராகுல் காந்தியின் வெற்றி வாய்ப்பு கேள்வி குறி என்றும் பாஜக தரப்பில் செய்தி பரப்பப்படுகிறது.


வயநாட்டில் தோல்வி அடைந்தால் எம்.பி.,ஆகும் வாய்ப்பு போய்விடும். அதே சமயம் காங்கிரஸ், உ.பி.,யில் தங்களின் கோட்டையாக இருக்கும் ரேபரேலி, அமேதி இரு தொகுதிகளையும் இழக்க நேரிடும். இது கட்சிக்கு இன்னும் பின்னடைவை கொடுக்கும். ரேபரேலியில் சோனியாவிற்கு பதில் ராகுலே நிற்பதால் அவருக்கு பலமும் அதிகரிக்கும், வெற்றி வாய்ப்பும் அதிகம். எம்.பி., பதவியும் உறுதியாகி விடும். அதனால் தான் கடைசி நிமிடத்தில் ராகுல் காந்திர முடிவை மாற்றி கொண்டுள்ளார் என்று கூட அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்