பெங்களூரு: பிரஜ்வால் ரேவண்ணா வீடியோ குறித்த விவகாரத்தில் எங்களது பெயர்களை ஏன் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது ரேவண்ணா குடும்பப் பிரச்சினை. இதில் எங்களுக்குத் தொடர்பில்லை என்று முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவரம், பிரஜ்வால் ரேவண்ணாவின் சித்தப்பாவுமான எச். டி.குமாரசாமி கூறியுள்ளார்.
ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளரான பிரஜ்வால் ரேவண்ணா, பெண்களை தவறாகப் பயன்படுத்தி ஆபாச கோலத்தில் வீடியோ எடுத்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பிரஜ்வால் ரேவண்ணா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவர் ஜெர்மனிக்குத் தப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரஜ்வாலின் சித்தப்பாவான குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான வீடியோக்களை வெளியிட்டது யார்.. தேர்தலுக்கு முன்பு அதை வெளியிட்டது யார்.. அப்படி வெளியிட என்ன காரணம்.. பழைய விவகாரத்தை தேர்தல் சமயத்தில் கிளற என்ன காரணம். எஸ்ஐடி அமைத்திருக்கிறார்கள். அவர்கள் விசாரிக்கட்டும், உண்மை வெளி வரட்டும். தவறு செய்தவர்கள் சட்டப்படியான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.
ஹசன் தேர்தலில் எங்களது வேட்பாளர் (பிரஜ்வால் ரேவண்ணா) வெற்றி பெறுவார். இதை நான் சொல்லவில்லை. எல்லோரும் சொல்கிறார்கள்.
நான் காங்கிரஸ் காரர்களைப் பார்த்துக் கேட்பது, எதற்காக இந்த விவகாரத்தில் குடும்பப் பெயரை இழுக்கறீர்கள். இது ஒரு குடும்பப் பிரச்சினை கிடையாது. தனிப்பட்ட நபர் சம்பந்தப்பட்டது. இதில் எங்களுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது. இது ரேவண்ணா குடும்பத்தின் பிரச்சினை. அதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்கள் தனியாக வசிக்கிறார்கள் என்றார் குமாரசாமி.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}