நாங்கள் டீம் "INDIA".. அதிர வைத்த பிசிசிஐ டிவீட்!

Sep 06, 2023,10:45 AM IST
மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரத் என்று பெயர் மாற்ற வேண்டும். ஜெய்ஷாவும், இந்திய கிரிக்கெட் வாரியமும் இதைச் செய்ய வேண்டும் என்று வீரேந்திர ஷேவாக் கோரிக்கை வைத்த நிலையில் "நாங்கள் டீம் இந்தியா" என்று பிசிசிஐ வெளியிட்ட டிவீட் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும் என்று சிலர் கிளம்பியுள்ளனர். ஜி20 மாநாட்டுக்கு வருவோரை விருந்துக்கு அழைக்கும் குடியரசுத் தலைவரின் அழைப்பில் பாரத குடியரசுத் தலைவர் என்ற வார்த்தை இடம் பெற்றதால் பெரும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.





இதை வைத்து பல்வேறு மாநில ஆளுநர்கள், பாஜக முதல்வர்கள் உடனடியாக பாரத் என்ற பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். பாஜகவினரோ ஒரு படி மேலே போய் எதெல்லாம் பாரத் என்று மாற்றப்படவுள்ளது என்று லிஸ்ட் போட்டு சிலாகிக்க ஆரம்பித்து விட்டனர். 

இந்த சிலாகிப்பு குழுவில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வீரேந்திர ஷேவாக்கும் இணைந்துள்ளார். அவர் போட்ட டிவீட்டில், இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். பாரத் என்பதுதான் நமது நாட்டின் உண்மையான பெயர். அந்தப் பெயரை நாம் திரும்பப் பெற இத்தனை கால தாமதமாகி விட்டது. நான் ஜெய்ஷாவையும், இந்திய கிரிக்கெட் அணியையும் கேட்டுக் கொள்வதெல்லாம், நமது அணியின் பெயரை பாரத் என்று மாற்றம் செய்ய வேண்டும் என்பதே. உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின்போது நமது வீரர்கள் பாரத் என்ற பெயரை நெஞ்சில் தாங்கியிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து பலரும் ஷேவாக்கைக் கலாய்த்து வருகின்றனர். அப்படியென்றால் இதுவரை இந்தியா என்ற பெயரால் உங்களுக்கு எந்த கெளரவமும் சேரவில்லையா என்று கேட்டு வருகின்றனர். 

இப்படிப்பட்ட நிலையில் பிசிசிஐ நேற்று இரவு போட்ட ஒரு டிவீட் சலசலப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  உலகக் கோப்பை கிரிக்கெட் அணி தொடர்பாக ஒரு டிவீட் போட்டிருந்தது பிசிசிஐ. அதில் நாங்கள் டீம் இந்தியா என்று கூறியிருந்தது.  இந்த டிவீட்டிலும் வந்து "இந்தியர்களும்", "பாரதியர்களும்" மாறி மாறி கமெண்ட் போட்டு வருகின்றனர்.

வீரேந்திர ஷேவாக் போல அவசரப்பட்டு பெயரை மாற்ற பிசிசிஐ தயாராக இல்லை போலும்!

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்