சென்னை: கேப்டன் விஜயகாந்த், மேலும் பல வருடங்கள் வாழ்ந்து நம்மையும் வாழ வைப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் மறைந்திருப்பது பெரும் வேதனை அளிக்கிறது என்று நடிகை சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயாந்த் மறைவிற்கு சினிமா, அரசியல் என்று இல்லாமல், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதர் இவ்வளவு விஷயங்கள் செய்திருக்கிறார் என்றால் மிகவும் வியப்பு ஏற்படுகிறது.
பணம் இருந்தும் பணத்தின் மீது விருப்பு இல்லாமல், மனிதனின் மணங்களை உணர்ந்து இவ்வளவு செய்திருக்கிறார்.பலனை எதிர்பார்க்காமல் இவர் செய்த தொண்டு மிகப்பெரியது. கேப்டன் சார் உங்ளுக்கு இளைய தலைமுறையினர் சார்பாக வணக்கங்கள் கோடி என்று பலரும் நெகிழ்ந்து கூறுகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் உருக்கமான பதிவைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கேப்டன் விஜயகாந்த் சார்.. அவருக்கு இந்த நிலை ஏற்படும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் பல வருடங்கள் அவர் வாழ்ந்து எங்களையும் வாழ வைப்பார் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர் இறந்ததை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
என்னைப் பொறுத்தவரை நான் ஓர் இளம் நாயகி.. என்னிடம் மூத்த கலைஞர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டதுண்டு. கேப்டன் இருந்த காலகட்டத்தில் சினிமா தலை சிறந்து விளங்கியது. பெண்களுக்கும் பாதுகாப்பாக நிறைய விஷயங்கள் செய்திருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் லைட்மேன்கள் முதல் கதாநாயகன் வரை அனைவரையுமே சமமாக நடத்துவற்கு காரணமானவர் கேப்டன். இன்று அவர் உயிரோடு இல்லை என்றாலும், அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் என நம்புகிறோம். கேப்டனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}