ஈரான் மதத் தலைவர் கமேனியைக் கொல்ல கடுமையாக முயன்றோம்.. முடியவில்லை.. இஸ்ரேல் ஒப்புதல்

Jun 27, 2025,12:04 PM IST

டெல்லி: ஈரானிய சுப்ரீம் தலைவர் அயத்துல்லா கமேனியை கொல்ல இஸ்ரேல் தீவிரமாக முயன்றதாகவும், கடுமையாக தேடிப் பார்த்ததாகவும், ஆனால் அவர் பங்கருக்குள் போய் விட்டதாலும், அவர் யாருடனும் தொடர்பு கொள்ளாமல் இருந்ததாலும் தங்களது திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. 


இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அண்மையில் நிலவிய பதற்றங்களின் போது, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்யத்தான் இஸ்ரேல் தீவிரமாக குறி வைத்தது. கமேனி இறந்தால்தான் பிரச்சினை தீரும் என்று இஸ்ரேல் பிரதமர் நதன்யாகுவே கூறி வந்தார்.  ஆனால் இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. காரணம், கமேனி கொல்லப்பட்டால் அது இஸ்லாமிய நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம், போர் நீண்ட காலமாக மாறி விடும், அது இஸ்ரேலுக்கு நல்லதல்ல என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்ததாக கூறப்படுகிறது.


மேலும் கமேனி ரகசிய அறைக்குள் போய் விட்டார். ராணுவ அதிகாரிகளுடன் கூட அவர் தொடர்பு கொள்ளவில்லை. அவர் கொடுத்த உத்தரவுகளை வைத்துத்தான் ஈரான் ராணுவம் தீரமாக போரிட்டது. எதிர்பார்த்ததை விட ஈரான் பதிலடி கடுமையாக இருந்ததாலும், ஆவேசமாக இருந்ததாலும்தான் இஸ்ரேல் பின்வாங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கமேனியைக் கொல்ல தாங்கள் முயன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.




இதுகுறித்து இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு அளித்த தொடர் நேர்காணல்களில் கூறுகையில், அவர் எங்கள் இலக்கில் இருந்திருந்தால், நாங்கள் அவரை அகற்றியிருப்போம். நாங்கள் நிறைய தேடினோம். ஆனால் அயதுல்லா கமேனி விரைவாக ஒரு பதுங்கு குழிக்குள் சென்று, உயர்மட்ட இராணுவத் தளபதிகளுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டு விட்டார். எங்களது திட்டத்தை கமேனி புரிந்துகொண்டு, மிக ஆழமாக நிலத்தடிக்குச் சென்று, தளபதிகளுடனான தொடர்பைத் துண்டித்துவிட்டார்... எனவே எங்களது திட்டம் சாத்தியமில்லாமல் போய் விட்டது என்றார் காட்ஸ்.


இதற்கிடையே போர் நிறுத்தத்திற்குப் பிறகு கமேனியின் முதல் பேச்சு வெளியாகியுள்ளது. அதில் ஈரானின் அணு சக்தி திட்டங்களை தகர்த்து விட்டதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறியுள்ளதை கமேனி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அமெரிக்க தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளதாகவும், ஈரான் அணு சக்திக் கட்டமைப்புகளுக்கு எந்த பெரிய சேதமும் ஏற்படவில்லை. தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பிற்கு "குறிப்பிடத்தக்க எதையும்" ஏற்படுத்தவில்லை. அமெரிக்காவின் கூற்றுக்களை மிகைப்படுத்தப்பட்டவை. அமெரிக்க அதிபர் அசாதாரணமான வழிகளில் சம்பவங்களை மிகைப்படுத்திக் கூறியுள்ளார் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்