"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை

Jun 17, 2026,05:53 PM IST

சென்னை: தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், அரசியல் பிரமுகருமான அண்ணாமலையின் புதிய நகர்வுகள். 


அவர் தொடங்கியுள்ள தன்னாட்சி சமூக அமைப்பான "We The Leaders" மக்கள் மத்தியில் மெதுவாக வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் ஆன்லைன் மூலமாக இணைந்துள்ளனர். இந்நிலையில், இந்த இயக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள புதிய விளக்கம் இணையதளங்களில் தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.


சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்ணாமலை ஒரு புதிய காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், இந்த இயக்கத்தில் இணையும்படி தான் யாருக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "முன்பிருந்த கட்சியிலோ அல்லது இப்போதோ நான் யாருக்கும் தனிப்பட்ட முறையில் போன் செய்து இந்த இயக்கத்தில் இணையுமாறு அழைக்கவில்லை. எனது அறைகூவலை ஏற்று, சுய விருப்பத்தின் பேரில் இந்த இயக்கத்தில் இணைந்துள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.




தொடர்ந்து தனது காணொளியில் இந்த இயக்கத்தின் எதிர்காலப் பாதை மற்றும் அதன் இலக்குகள் குறித்துப் பேசிய அண்ணாமலை, தற்போதைக்கு இது ஒரு மக்கள் இயக்கமாகவே செயல்படும் என்பதைத் திட்டவட்டமாகக் கூறினார். அவர் பேசுகையில், "We The Leaders இயக்கத்தை நான் சரியான பாதையில் கொண்டு செல்வேன். தற்போதைய சூழலில் இது ஒரு சமூக மாற்றத்திற்கான இயக்கமே. ஆனால், ஒருவேளை எதிர்காலத்தில் இந்த இயக்கம் ஒரு அரசியல் கட்சியாக மாறினால், இதன் தன்மையே முற்றிலும் வேறு மாதிரி இருக்கும்" என்று அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த 'வேறு மாதிரி இருக்கும்' என்ற வார்த்தைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்த இயக்கம் மக்களுக்குச் சொந்தமானது என்ற முழக்கத்துடன் செயல்படும் இந்த 'We The Leaders' இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில், தற்போதைய நிலவரப்படி சுமார் 18,06,584-க்கும் மேற்பட்ட (1.8 மில்லியனுக்கும் அதிகமான) தீவிர உறுப்பினர்கள் இணைந்துள்ளதாகப் புகைப்படத் தகவல்கள் காட்டுகின்றன. 


அரசியல் மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்கள் இந்த இயக்கத்தில் தன்னார்வலர்களாகத் தொடர்ந்து இணைந்து வருவதால், வரும் நாள்களில் இந்த இயக்கம் தமிழகத்தின் மிக முக்கியப் சக்தியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்