சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து (பாஜக) விலகியுள்ளதாக அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கவிருப்பதாகவும், அது வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அரசியல் கட்சியாகப் போட்டியிடும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
பாஜகவிலிருந்து விலகியதற்கான பின்னணி குறித்துப் பேசிய அண்ணாமலை, "கடந்த 18 மாதங்களாக பாஜக தலைமையுடன் எனக்குக் கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. எனது கருத்துகளுக்கு பாஜக தலைமை செவி சாய்க்கவில்லை. தற்போது சரியான தருணம் வந்துள்ளது; எதிர்காலத்தை நோக்கி நாம் பயணப்பட வேண்டிய நேரம் இது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் பெயரைப் பயன்படுத்திய அண்ணாமலை

கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த ஒரு முக்கிய நிகழ்வையும் அண்ணாமலை இந்த பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார். "ரஜினிகாந்த் கடந்த 2020ஆம் ஆண்டே என்னை அவரது கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். நான் பாஜக.,வில் இணைவதற்காக டில்லி சென்றிருந்த நிலையில் அவர் என்னை அழைத்து, தான் துவங்க போகும் புதிய கட்சியில் இணைய வருமாறு அழைத்தார். ஆனால், நான் ரஜினியின் அந்த அழைப்பை அன்போடு மறுத்துவிட்டு, பாஜகவில் இணையப் போகிறேன் என்பதை அவரிடம் தெளிவாகக் கூறிவிட்டேன்" என்று அவர் விளக்கியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அன்று ரஜினி அழைத்த போது எனது கண் முன் 3 விஷயங்கள் தான் இருந்தன. ஒன்று, ரஜினி அரசிலுக்கு வருவது தமிழக மக்களுக்கு நல்லது. இரண்டாவது, அவர் அரசியலுக்கு வராமல் இருந்தால் அவருக்கு நல்லது. 2020ம் ஆண்டு கோவிட் சமயத்தில் அவரது உடல்நலத்தை பாதுகாக்க வேண்டிய சூழல் இருந்தது. மூன்றாவது என்னுடைய அரசியல் எதிர்காலம் என்பது தான். பெருமைமிகு இந்தியனாகவும், பாரம்பரியமான தமிழனாகவும் இருக்க நான் நினைத்து தான் பாஜக.,வில் இணைந்தேன்.
"இயக்கம் தொடங்கி அரசியல் கட்சியாக்குவேன்"
தனது புதிய அரசியல் பயணம் குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டில் அன்போடும் ஆனந்தத்தோடும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை நாம் தொடங்கவிருக்கிறோம் என்றார். "மாறுவோம்... மாற்றுவோம் என்பதே நமது இயக்கத்தின் கொள்கை" என்று முழங்கிய அவர், தனது எதிர்காலத் திட்டங்களை வரிசையாகப் பட்டியலிட்டார்:
முதலில் இந்த அமைப்பை ஒரு இயக்கமாகக் கொண்டு வந்து, அனைவரையும் உள்ளே இணைப்பேன். அதன் பிறகு அவர்களுக்கு அரசியல் சொல்லிக் கொடுத்து, அதை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றுவேன். நான் தொடங்கவுள்ள இந்தத் தனி இயக்கம், தமிழ்நாட்டில் அடுத்து நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் (சட்டமன்றத் தேர்தல்) முறைப்படி அரசியல் கட்சியாகப் போட்டியிடும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
சிறந்த மூளைகளை, தகுதியானவர்களை அரசியலுக்குக் கொண்டு வருவதே எனது நோக்கம். அதற்குச் சிறிது காலம் அவகாசம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் மொழி மற்றும் அதன் இலக்கணத்தையே மாற்ற வேண்டும் என்பதே எனது முதன்மையான விருப்பம். எந்தவொரு சூழலிலும் சமரசம் செய்து கொள்ளாத உறுதியான கொள்கைகளைக் கொண்ட இயக்கமாக இதனை வழி நடத்துவதே எனது இறுதி இலக்கு. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாம் துவங்க போகும் அரசியல் இயக்கம் யாருக்கும் போட்டியாக கிடையாது. புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அனைவருக்கும் அரசியல் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அரசியல் இயக்கம் துவங்க போகிறேன் என்றும் அண்ணாமலை தெளிவுபடுத்தி உள்ளார்.
2009 ம் ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் இன்டன்ஷிப் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதே தமிழகத்திற்கு புதிய அரசியல் இயக்கம் தேவை என்ற தேடலும், விருப்பமும் இருந்தது. என்னுடைய 15 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு தற்போது புதிய இயக்கத்தை துவங்கும் முடிவை எடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!
Tamil Short Story: சிரிச்ச மூஞ்சி!
Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?
பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!
உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!
ஆசையே அலை போலே!
அப்பத்தா அப்பத்தா!.. ஒரு நிமிடக் கதை (14)
இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு
காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக
{{comments.comment}}