- புலவர் கவித்தென்றல் ப.ஈஸ்வரநாதன்
இரும்பு கரமாய் உழைக்கும் கரங்களாகுமே
வியர்வையில் குளித்திடும் விடாத முயற்சியாகுமே
நிறைந்த உழைப்பும் உயர்ந்த கைகளுமே
ஊக்கமும் ஆக்கமும் வெற்றியை தொட்டிடுமே
கடினமாய் உழைத்திடுவோம்
பலனும் பெரிதாகுமே
உழைப்பால் வாழ்வில்
நிலையான வெற்றியாகுமே

சாதிக்க விடாமல்
தடைகள் வந்தாலுமே
வெற்றிக்கு உதவிடும்
படிக்கற்களாய் அமைத்திடுவோமே
வளமாய் உழைக்கவே உயர்ந்தும் நிற்போமே
ஒவ்வொரு நாளும்
வாழ்வும் நலமாகுமே
நாளெல்லாம் உழைத்திடுவோம் புகழ்பெற்றே வாழ்ந்திடுவோமே
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர் மற்றும் நெறியாளர்.)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}