டில்லி: ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்திய ரயில்வே தொடர்ந்து பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரயில்வேயின் RailOne செயலி மற்றும் ஆர்-வாலட் (R-Wallet) மூலம் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை பதிவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணச் சலுகை காலத்தை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கட்டணச் சலுகை கால நீட்டிப்பு :
ரயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, RailOne செயலி மூலம் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை எடுக்கும் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் 3% கட்டணச் சலுகை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது:
RailOne செயலி: இச்செயலியில் முன்பதிவில்லா டிக்கெட் எடுப்போருக்கான 3% கட்டண சலுகை 2027 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆர்-வாலட் (R-Wallet): ஆர்-வாலட் மூலம் ரயில் டிக்கெட் எடுப்போருக்கான 3% கட்டணச் சலுகையானது 2028 ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தும் முறைகள் :

RailOne செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் தங்களுக்கு வசதியான பல்வேறு டிஜிட்டல் முறைகளில் கட்டணத்தைச் செலுத்தலாம்.
யுபிஐ (UPI)
டெபிட் கார்டு (Debit Card)
கிரெடிட் கார்டு (Credit Card)
மேற்கண்ட டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்துவதன் மூலமும் பயணிகள் இந்த 3% கட்டணச் சலுகையைப் பெறலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு கிடைக்கும் பலன்கள் :
ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும், டிஜிட்டல் முறையை எளிதாகப் பயன்படுத்தவும் இச்செயலி பெரிதும் உதவுகிறது. ரயில்வேயின் இந்தச் சிறப்பு நடவடிக்கை தினசரி ரயில் பயணிகள், புறநகர் ரயில் பயணிகள் மற்றும் முன்பதிவில்லாப் பெட்டிகளில் பயணிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்குப் பெரும் பயனுள்ளதாக அமையும்.
Be ready to live like an amphibian... தவளை மாதிரி வாழக் கத்துக்கோங்க!
If you are brave enough to say goodbye .. யோசிக்கவே யோசிக்காதீங்க!
If you Say goodbye bravely .. தயங்காமல் சொல்லிடுங்க!
உழைப்பின்றி உயர்வில்லை!
டில்லியில் உச்சகட்ட பதற்றம் : 3வது நாளாக முடங்கிய பார்லிமென்ட்...எதிர்க்கட்சிகள் போராட்டம்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: RailOne செயலியில் 3% கட்டணச் சலுகை நீட்டிப்பு
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்...அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
தலைமைச் செயலகத்தில் புகுந்து போராட முயன்றது ஏன்.. அறிவு விளக்கம்
{{comments.comment}}