சென்னை: வங்கக் கடல் காற்றழுத்தத் தாழ்வானதா புயலாக மாறும் கோணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்று வட தமிழ்நாட்டில் பெரிதாக மழை இருக்காது என்றும், காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறியதும் மழை பெய்யத் தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் குறைந்த காற்றவுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அது அடுத்து கட்டமாக தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ஆழ்ந்த மண்டலமாகவும் மாறி, அடுத்து புயலாக உருவெடுக்கும். புயலாக மாறும்போது இதற்கு மிச்சாங் என்று பெயரிடப்படும்.
தற்போது வட தமிழ்நாட்டில் பெரிதாக மழை இல்லை. இரவில் சற்று பெய்தது. காலையில் அலுவலகம் போகும் நேரத்தில் சிறிது நிமிட மழை இருக்கிறது. மற்றபடி இன்று பெரிதாக மழை இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். புயலானது இப்போதுதான் உருவாக்கத்தில் இருக்கிறது. மேகக் கூட்டங்கள் ஒன்றிணைந்து இறுகப் பற்றி புயலாக வலுவெடுத்ததும்தான் நமக்கான மழை குறித்து கணிக்க முடியும்.
புயல் சின்னம் நகரும் திசை குறித்து இன்று தெளிவாகத் தெரிந்து விடும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார். புயல் சின்னமானது வலுவடைந்து புயலாக மாறியதும் மழை அதிகரிக்கத் தொடங்கும். புயலானது புதுச்சேரிக்கும், தெற்கு ஆந்திரப் பிரதேசத்துக்கும் இடையே வட தமிழ்நாட்டில் கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அது சென்னையில் கரையைக் கடக்குமா அல்லது சென்னைக்கு அருகே கரையைக் கடக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}