சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை தொடர்பான வழக்கின் முதல் தகவல் அறிக்கை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லீக் ஆகியிருக்கலாம். அது வெளியானது சட்டப்படி குற்றமாகும். இதற்குக் காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்துள்ளன. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் இன்று விளக்கினார்.
ஆணையர் அருண் கூறிய தகவல்கள்:

- பாதிக்கப்பட்டவர் சொன்ன தகவல்களின் அடிப்படையில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர் சொன்னதைத்தான் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளோம்.
- செல்போன் சிக்னல் ஆதாரங்களின் அடிப்படையில், அறிவியல் ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் குற்றவாளியைக் கைது செய்தோம். கைது செய்யப்பட்ட நபர் மீது திருட்டு உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர் மட்டுமே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது இதுவரை நடந்த புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- இந்த நபர் மீது வேறு எந்தப் பெண்ணும் இதுவரை புகார் தரவில்லை. யாரேனும் புகார் கொடுத்தால் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- எங்களைப் பொறுத்தவரை குற்றவாளி யார் என்று பார்க்க மாட்டோம். குற்றத்தை மட்டுமே பார்ப்போம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் காவல்துறை பார்க்காது. கோட்டூர்புரம் காவல் நிலையத்தைப் பொறுத்தவரை பாதுகாப்புப் பகுதிகளை 3 பிரிவாக பிரித்துள்ளனர். இதில் அண்ணா பல்கலைக்கழகம் ஏ செக்டார் பிரிவில் வருகிறது. இந்த பகுதிக்கு மட்டும் 3 வகையான பட்ரோல் அதாவது கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. குற்றம் நடந்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டுள்ளனர். இதனால்தான் குற்றவாளியை சில மணி நேரங்களில் கைது செய்ய முடிந்தது.
- முதல் தகவல் அறிக்கை வெளியானது சட்டப்படி குற்றமாகும். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல் தகவல் அறிக்கை பதிவானதும் அது லாக் ஆவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு அது லீக் ஆகியிருக்கலாம். எந்த வழக்காக இருந்தாலும் முதல் தகவல் அறிக்கை பாதிக்கப்பட்டவர்களுக்கும் நகல் வழங்கப்படும்.
- அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவிக்கள் உள்ளன. அதில் 56 சிசிடிவிகள் வேலை செய்கின்றன. முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 149 பாதுகாவலர்கள் அங்கு 3 ஷிப்ட் அடிப்படையில் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- முதல்வர் அவர்கள் நான் பதவியேற்ற போதும் சரி, அதன் பிறகு அவர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டங்களிலும் சரி, குற்றவாளிகள் யார் என்று பார்க்காதீர்கள், எந்தக் கட்சி என்று பார்க்காதீர்கள். நடுநிலையுடன் செயல்படுங்கள் என்றுதான் சொல்லி வருகிறார். எனவே காவல்துறை நடவடிக்கையில் எந்த பாரபட்சமும் இல்லை. யாருடைய தலையீடும் இல்லை என்றார் ஆணையர் அருண்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வீழ்வது முடிவா.. அட அதுதாங்க ஆரம்பமே.. Falling is not the end!
கனவு .. யதார்த்தம்.. ஒரு அழகிய அனுபவம்.. A fantasy with a mermaid
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
Bollywood is Back: பாலிவுட்டின் பிரம்மாண்ட எழுச்சி.. வசூல் வேட்டையில் பார்டர் 2 மற்றும் துரந்தர்!
மகாராஷ்டிரா துணை முதல்வராக சுனேத்ரா பவார் இன்று மாலை பதவியேற்பு
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
வலி இல்லாமல் வழி பிறக்காது.. Protect Yourself From Your Thoughts
{{comments.comment}}