- எம்.கே.திருப்பதி
பராபவத் தாய்
பிறப்பெடுத்தாள்
ஆண்டு அறுபதில்
அவளும் ஒருதாய்!
முத்திரை பதிக்கும்
சித்திரை ஒன்று
முதுமொழி தமிழின்
முதல்நாள் இன்று!
மொழித் தாயின் புத்தாண்டை
வழிமொழிவோம்
கிளி மொழியின் கீர்த்தியை
எழில் செய்வோம்!
கனியது படைத்து
இனியது செப்புவோம் - புது
துணியது உடுத்தி
மங்களகரமாய்
மஞ்சளை அப்புவோம்!

ஆலயம் தோறும்
அன்னைத்தமிழ் இசைப்போம்
ஆங்கில மனங்களிலும்
அருமைத் தமிழ் விதைப்போம்!
வெண்கலப் பொருளும்
மங்கலப் பொருளும்
வீடெங்கும் நிறைப்போம்!
வீட்டு வனப்பும்
நாட்டு வனப்பும்
விண்ணுயரம் உய்ய
விளக்கேற்றி வைப்போம்!
இன்தமிழ்ப் பாட்டிக்கு
வண்தமிழ் வரிகளால்
கவித்தறியில்
காவியம் நெய்வோம்!
கடவுளர் வரிசையில்
காரிகையை இருத்தி
கண்ணும் கருத்துமாய்
காரியம் செய்வோம்!
மாவிலைத் தோரணமும்
மஞ்சள் கொத்தும்
கதம்ப மாலையும்
காலையும் மாலையும்
காட்சிப்படுத்துவோம்!
கொத்தோடு மாங்காயும்
குலையோடு தேங்காயும்
கோர்வை செய்து
குலவை இடுவோம்!
இனிக்கும் புத்தாண்டில் - நம்மை
பிணிக்கும் சிக்கல்கள்
ஓய்ந்து போகட்டும்!
நலமில்லா செயலை
நமக்கும் நாட்டுக்கும்
திணிக்கும் தீங்குகள்
தீய்ந்து போகட்டும்!
கருப்பும் சிவப்பும்
காணாமல் போகட்டும்
மஞ்சளும் பச்சையும்
மண்புவி தங்கட்டும்
வீதிகள் தோறும்
நீதிகள் நிலைக்கட்டும்
இல்லங்கள் தோறும்
உள்ளங்கள் நிறையட்டும்!
ஆழியின் நீராய் உங்கள்
அறிவுகள் பெருகட்டும்!
மேழியின்
முனைப்பட்ட நிலமாய்
உங்கள்
மேன்மைகள் மிளிரட்டும்!
இனிப்பும் பொங்கலும்
எங்கும் தங்கட்டும்
பிஞ்சுகளின் சிரிப்பாய்
புத்துணர்வு பொங்கட்டும்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!
Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!
CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?
கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!
CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!
Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!
Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!
MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்
CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்
{{comments.comment}}