- அ.சீ.லாவண்யா
சென்னை: தைப்பூசம் என்பது தமிழர்களின் முக்கியமான ஆன்மீகத் திருநாள்களில் ஒன்றாகும். தமிழ் மாதமான தை மாதத்தில், பூசம் நட்சத்திரம் கூடும் நாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் முழுவதும் முருகப் பெருமானுக்கே அர்ப்பணிக்கப்பட்டது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள், குறிப்பாக தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இதை மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகின்றனர்.
தைப்பூசத்தின் வரலாறு தேவர்களும் அசுரர்களும் இடையே நடந்த போர்க் கதையுடன் தொடர்புடையது. அசுரர்களின் கொடுமையை அழிக்க சிவபெருமான், பார்வதிதேவியின் கரங்களில் இருந்து வேல் என்ற ஆயுதத்தை முருகனுக்கு வழங்கினார். அந்த வேலின் சக்தியால் சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்கள் அழிக்கப்பட்டனர். அந்த வெற்றியின் நினைவாகவே தைப்பூசம் கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.
வேல் என்பது அறிவு, தைரியம், தீமையை அழிக்கும் சக்தி ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. தைப்பூச நாளில் முருகன் தன் பக்தர்களின் துன்பங்களை அகற்றி, மன உறுதியை அளிப்பதாக நம்பப்படுகிறது. அதனால் இந்த நாளில் விரதம் இருந்து, தூய மனதுடன் வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.
தைப்பூசத்தில் காவடி எடுப்பது முக்கியமான வழிபாட்டு முறையாகும். காவடி என்பது பக்தி, தியாகம், கட்டுப்பாடு ஆகியவற்றின் குறியீடாக பார்க்கப்படுகிறது.
விரதம் மேற்கொள்ளும் முறை

பக்தர்கள் காலை எழுந்து நீரடி தங்கள் வீட்டில் இருக்கும் முருகர் படத்திற்கு அல்லது முருகர் சிலைக்கோ அபிஷேகம் அலங்காரம் செய்து தங்கள் மனதில் உள்ள கோரிக்கைகள் மற்றும் வேண்டுதல்களை முழு நம்பிக்கையுடன் வைத்து பிராத்தனை செய்து வழிபாட்டால் அடுத்த தைப்பூ சத்திற்குள் முருகர் தங்கள் வைத்த பிராத்தனைகளை நிறைவேற்றுவர்.
தைப்பூசம் விரதம் மன அமைதியையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும் ஆன்மீக அனுபவமாகக் கருதப்படுகிறது. முருகப் பெருமானின் அருளால் வாழ்க்கை பாதையில் உள்ள தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தலைமுறைகள் கடந்து வரும் ஒரு புனித பாரம்பரியமாக இன்று வரை தொடர்கிறது.
1. மன அமைதி கிடைக்கும்
2. துன்பங்கள் விலகும்.
3. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
4. கல்வியில் முன்னேற்றம்.
5. வேலை-தொழில் தடைகள் நீங்கும்.
6. உடல் ஆரோக்கியம் மேம்படும்.
7. குடும்ப ஒற்றுமை பெருகும்.
8. வேண்டுதல்கள் நிறைவேறும்.
9. தீய எண்ணங்கள் அகலும்.
10. முருகப் பெருமானின் அருள் பெறலாம்
11: நேர்மறை ஆற்றல் பெருகும்
12. குழந்தை வரம் கிடைக்கும்
13: கடன் சுமை குறையும்
14: அரோகியமான வாழ்வு
வேல் துணை நிற்கும் வரை நம் வாழ்வில் வெற்றி தான்.
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
{{comments.comment}}