ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க.. ராமர் என்ன செய்தார் தெரியுமா?

Jan 21, 2024,12:12 PM IST

தனுஷ்கோடி : தமிழ்நாடு  வந்துள்ள பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தை தொடர்ந்து தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி கோவில் ஜனவரி 21ம் தேதியான இன்று காலை சுவாமி தரிசனம் செய்ததுடன், அங்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டார். ராமேஸ்வரத்துக்கும், தனுஷ்கோடிக்கும், ராமருக்கும் நிறைய தொடர்பு உள்ளது. 


அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12ம் தேதி முதல் 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார். அதிகாலை 04.30 மணிக்கு எழுந்து யோகா, தியானம், மந்திர ஜபம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். பழங்கள், இளநீர் மட்டுமே அவர் உணவாக எடுத்து வருகிறார். இரவில் தரையில் மரப்பலகையின் மீது யோகா விரிப்பை விரித்தே அவர் படுத்து உறங்கி வருகிறார். 


ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தென்னிந்தியாவில் உள்ள முக்கிய வைணவ தலங்களில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்து வருகிறார். ஜனவரி 20ம் தேதியான நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, கம்ப ராமாயண பாராயணத்தை கேட்டு மகிழ்ந்த மோடி, தொடர்ந்து ராமேஸ்வரம் ராமதநாதசுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார். 




சரி ராமேஸ்வரத்துக்கும், தனுஷ்கோடிக்கும்.. கடவுள் ராமருக்கும் என்ன தொடர்பு உள்ளது? நிறைய தொடர்பு இருக்கு.


ராமாயணத்தின் படி, வேதங்களை கற்றறிந்த பிராமணனான ராவணனை கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. மாபாதகங்களை செய்தவர்களுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக சீதா, லட்சுமணன், அனுமனுடன் ராமேஸ்வரம் வந்த ஸ்ரீராமர், இங்கு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, தோஷ நிவர்த்தி பெற்றார். அது மட்டுமின்றி ராமருக்கும் ராமேஸ்வரம் தலத்திற்கும் பல நெருங்கிய தொடர்பு உண்டு. 


இப்படி நெருக்கமான தொடர்புகள் ராமருக்கும், ராமேஸ்வரத்துக்கும், தனுஷ்கோடிக்கும் இருப்பதால்தான் பிரதமர் நரேந்திர மோடியும் ராமேஸ்வரம் வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார்.


ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, பிறகு 22 தீர்த்தங்களிலும் நீராடினார். அதன் பிறகு கோவிலுக்குள் சென்ற அவருக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, நேற்று இரவு ராமேஸ்வரத்திலேயே பிரதமர் மோடி தங்கினார். இன்று காலை தனுஷ்கோடியில் உள்ள கோதண்ட ராம சுவாமி கோவில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்து, பூஜை செய்து வழிபட்டார். 


இதைத் தொடர்ந்து அவர் அரிச்சல்முனைக்கும் சென்று வழிபட்டார். அரிச்சல்முனையில் இருந்து தான் ஸ்ரீராமர், ராமர் சேது பாலத்தை கட்டத் துவங்கினார் என சொல்லப்படுவதால் இங்கும் பிரதமர் மோடி சென்று தரிசித்தார். இந்த ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்குப் புறப்பட்டார். அங்கிருந்து அவர் டெல்லி செல்கிறார்.


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்