பெங்களூரு: முன்னாள் கர்நாடக டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்துள்ளனர். கணவரைக் கொலை செய்த பின்னர், ஐபிஎஸ் அதிகாரிகளின் மனைவியர் நடத்தி வரும் வாட்ஸ் ஆப் குரூப்பில் சாத்தானைக் கொன்று விட்டேன் என்று கூறி அவர் மெசேஜ் போட்டதும் தெரிய வந்துள்ளது.
பெங்களூரு இல்லத்தில் கொல்லப்பட்ட கர்நாடகாவின் முன்னாள் காவல் துறைத் தலைவர் ஓம் பிரகாஷ், மதிய வேளையில் தமது மனைவி பல்லவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது தெரிய வந்துள்ளது. இந்தச் சண்டையின்போது, கணவர் மீது பல்லவி மிளகாய்ப் பொடியைத் தூவி, அவரைக் கட்டிப்போட்டு, பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 68 வயதான ஓம் பிரகாஷை, கண்ணாடி பாட்டில் கொண்டும் தாக்கியுள்ளார் பல்லவி என்று சொல்லப்படுகிறது.

சொத்துப் பிரச்சினை தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது. கணவரைக் கொலை செய்த பின்னர் பல்லவி, மற்றொரு காவல்துறை அதிகாரியின் மனைவியிடம் தொலைபேசியில் பேசி, தனது கணவரை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்மணி, தனது கணவரிடம் அதைக் கூறியுள்ளார். அவர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததும், போலீஸார் ஓம் பிரகாஷ் வீட்டுக்கு விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந் பல்லவியையும் அவரது மகளையும் விசாரணைக்கு எடுத்தனர். இருவரிடமும் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடந்தது. ஓம் பிரகாஷின் மனைவி பல்லவியே முக்கிய குற்றவாளி என்று உறுதியானதும் அவரை போலீஸார் கைது செய்தனர். ஓம் பிரகாஷின் உடலில் வயிறு மற்றும் மார்புப் பகுதிகளில் பல கத்திக் காயங்கள் காணப்படுகின்றன, மேலும் இந்த தாக்குதலில் இரண்டு கத்திகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
ஏன் இந்த வெறிச் செயல்
ஓம் பிரகாஷ் சமீபத்தில் தனது உறவினர் பெயருக்கு ஒரு சொத்தை பெயர் மாற்றம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவருக்கும் பல்லவிக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது, கடைசியில் அது கொலையில் போய் முடிந்து விட்டது. இந்த கொலையில் பல்லவியின் மகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஓம் பிரகாஷின் மகன் கார்த்திகேயா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கார்த்திகேயா அளித்த புகாரில், தனது தாயும் தங்கையும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தனது தந்தையை கொலை செய்யப் போவதாக மிரட்டி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மிரட்டல்களுக்குப் பின்னர், ஓம் பிரகாஷ் தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார். கொலை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது மகள் அவரைச் சந்தித்து திரும்பி வருமாறு
வற்புறுத்தியதால் அவர் மீண்டும் வந்துள்ளார். அதன் பிறகே தனது தந்தையைக் கொலை செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார் கார்த்திகேயா.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}