ஓ மை கடவுளே.. ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்னிக்கு என்ன ரேட் தெரியுமா!

Nov 20, 2023,01:46 PM IST

சென்னை: தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.


கடந்த இரண்டு நாட்களாக சமநிலையில் இருந்த தங்கம் விலை இன்று சற்று உயரத் தொடங்கியுள்ளது. ஐப்பசியில் ஏற்றம் காணும் என்று எதிர்பார்த்திருந்த தங்கத்தின் விலை இந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


ஆனால் கடந்த இரண்டு நாட்களாக ஏறாமல், இறங்காமல், சமநிலையில் இருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணத்தினால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்க சூழல் அதிகரித்து உள்ளதாக  நிபுணர்கள் தெரிவித்து  வருகின்றனர்.




தங்கம் விலை நிலவரம்


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5,705 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45,640 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6223 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகமாகும்.  8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.49784 ஆக உள்ளது. 


தங்கம்தான் இப்படி உயர்ந்திருக்கிறது.. ஆனால்  வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே இன்றும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 76 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 608 ஆக  உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்