எது அழகு?

Apr 04, 2026,03:21 PM IST

- புரட்சிப் பாவை தே.ஜெனிட்டா ரீனா


அம்மா அழகு 

அன்பு அழகு 

அப்பா அழகு 

அக்கா அண்ணன் அழகு.

அக்கறை அழகு 

அத்தை மாமா அழகு

உறவு பேரழகு 


முயற்சி அழகு 

ஆர்வம் அழகு

ஆக்கம் அழகு

ஆசை அழகு 

இயற்கை அழகு 

இனிமை அழகு 

இன்பம் இன்னும் அழகு 




இரவு அழகு 

இடி அழகு 

ஈகை அழகு

ஈர்ப்பு அழகு 

உண்மை அழகு 

உரிமை அழகு

உயர்வு அழகு 

ஊக்கம் அழகு 

எத்தனை எத்தனை அழகு?


எண்அழகு

எழுத்து அழகு 

ஏற்காடு அழகு 

ஏற்றம் அழகு

ஏறு அழகு

ஐம்பொன் அழகு 

ஐம்பொறி அழகு 


ஒற்றுமை அழகு 

ஒருமைப்பாடு அழகு 

ஒருத்தல் அழகு 


ஓங்குக அழகு 

ஓராயிரம் அழகு 

ஒளவை அழகு


கற்பு அழகு 

கடமை அழகு 

கண்ணியம் அழகு 

கட்டுப்பாடு அழகு 

காற்று அழகு

காதல் அழகு 


சட்டம் அழகு 

சரித்திரம் அழகு 

சாதனை அழகு 

தங்கம் அழகு

தரணி அழகு 

தங்கை அழகு 

தாரகை அழகு 


பட்டு அழகு 

பட்டாம்பூச்சி அழகு 

பருவம் அழகு

பறத்தல் அழகு 

பாட்டு அழகு 

பாயிரம் அழகு 


மகிமை அழகு 

மாண்பு அழகு

மன்னிப்பு அழகு 

மறத்தல் அழகு


வயல் அழகு 

வானம் அழகு 

விண்மீன் அழகு


சந்திரன் அழகு 

சூரியன் அழகு 

ராக்கெட் அழகு 

ஏவுகணை அழகு 

விண்கலமும் அழகு

கண்டுபிடித்த விஞ்ஞானமும் அழகு

காலம் அழகு

நேரம் அழகு

செயல் அழகு


எத்தனை எத்தனை அழகு இந்த உலகம்

கொண்டாடுவோம் அழகாய் தினமும்!


(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் வலம் வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

news

அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!

news

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!

news

Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!

news

முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!

news

Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!

news

My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்