சென்னை : ஜெயிலர் படத்தின் வெற்றி, வசூல் பற்றிய தகவல்கள் ஒரு பக்கம் ஹாட் டாக்காக போய் கொண்டிருந்தாலும், இந்த படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பள தொகை பற்றிய தகவல் மற்றொரு புறம் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினியின் 169 வது படமாக ரிலீசாகி உள்ளது ஜெயிலர். ஆகஸ்ட் 10 ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் வசூல் வேட்டை ஆடி வருகிறது. ரசிகர்களின் பெருத்த ஆதரவுடன் தொடர்ந்து 3 நாட்களாக திரும்பிய பக்கமெல்லாம் ஜெயிலர் படத்தை பற்றியே பேச வைத்துள்ளது. 2023 ம் ஆண்டு ரிலீசான படங்களிலேயே முதல் நாளே அதிகமாக வசூல் செய்து ஜெயிலர் முதலிடத்தில் இருந்து வருகிறது.
லேட்டஸ்ட் டாக் என்னவென்றால் ஜெயிலர் படத்திற்காக ரஜினி எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தான். தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, இந்த படத்திற்காக ரஜினி ரூ. 110 கோடிகளை சம்பளமாக வாங்கினாராம். காவாலா பாடலுக்கு கலக்கல் நடனமாடியதுடன் ஒரு சில சீன்களிலும் நடித்த தமன்னாவிற்கு ரூ.3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
காமியோ ரோலில் இரண்ட சீன்களில் மட்டும் நடித்த மோகன் லாலுக்கு ரூ.8 கோடியும், ஷிவ்ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷிராபிற்கு தலா ரூ.4 கோடிகளும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். யோகிபாபுவிற்கு ரூ.1 கோடி, ரம்யா கிருஷ்ணனுக்கு ரூ.80 லட்சம், சுனிலுக்கு ரூ.60 லட்சம், வசந்த் ரவிக்கு ரூ.30 லட்சம், ரெடின் கிங்ஸ்லேவிற்கு ரூ.25 லட்சம், வில்லன் விநாயகனுக்கு ரூ.35 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டைரக்டர் நெல்சனுக்கு விஜய் நடித்த பீஸ்ட் படத்திற்காக ரூ.8 கோடி சம்பளம் வழங்கிய சன் பிக்சர்ஸ், பீஸ்ட் படத்தை கமர்ஷியல் ஹிட் ஆக்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயிலர் படத்திற்கு ரூ.10 கோடியாக நெல்சனின் சம்பளத்தை உயர்த்தி உள்ளதாம்.
ஆனால் இதெல்லாம் ரொம்ப கம்மி, தலைவருக்கு இவ்வளவு கம்மியான சம்பளத்தையா சன் பிக்சர்ஸ் கொடுத்திருக்கும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மற்றொரு தகவலின் படி ரஜினிக்கு, ஜெயிலர் படத்திற்காக ரூ.200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}