சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது போல, நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்று நடிகர் சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது சுவாரஸ்யமான பதிலைக் கொடுத்துள்ளார் அவர்.
அயலான் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடிந்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்திருக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படம் முன்னாள் இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படம் நாளை மறுநாள் தீபாவளி அன்று வெளியாகிறது.
இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமரன் திரைப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பபட்டது. அதன்பின்னர் மாணவர்கள் கேட்க கேள்விக்கு சிவகார்த்திகேயன் உரையாற்றினார்.
அப்போது, ராணுவ உடைய கடைசியாக போட்டுவிட்டு அதன் நினைவாக உடையை வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டேன். உடையை விட முகுந்த் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த உடையை அணிந்த பிறகு சின்ன சின்ன மாற்றங்கள் எனக்குள் வந்துள்ளது. படப்பிடிப்பு சீரியசாக இருக்கும். ஆனால், நான் கொஞ்சம் ஜாலியாக தான் இருப்பேன். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னால் முதலில் மனரீதியாக என்னை தயார் படுத்திக் கொண்டேன். பின்னர் உடலை தயார் செய்தேன்.
விஜய் டிவியில் இருக்கும்போதே சாய் பல்லவியை தெரியும். சாய் பல்லவி என்னை அண்ணா என்று அழைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், இந்த படத்தில் என்னை அண்ணா என அவர் அழைக்கவில்லை என்று பேசியிருந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவகார்த்திகேயன் விஜய் அரசியலுக்கு வந்தது போன்று நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு கோட் திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்தது திரையுலகில் நடந்த ஒரு அழகான நிகழ்வு. ஒரு மூத்த நடிகருடன் இணைந்து நடித்தது அழகாக இருந்தது. அப்படிதான் நான் பார்க்கிறேன். நான் சினிமாவில் சாதிக்க வேண்டியதே இன்னும் நிறைய உள்ளது. அதை பற்றி பின்னர் பார்ப்போம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}