சென்னை : நடந்து முடிந்த தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் கொங்கு மண்டலத்தில் அக்கட்சி செல்வாக்கை இழந்து வருவது அம்பலமாகி உள்ளது. அதிமுகவின் வாக்குகளை தவெக கபளீகரம் செய்வதும் உறுதியாகியுள்ளது.
தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரண்டு தொகுதிகளும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள். இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, பிறகு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக.,வில் இணைந்த மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா இருவருக்கும் தவெக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்களை இந்த முறை தவெக சார்பில் போட்டியிட வைத்தால் நிச்சயம் தோற்பார்கள் என அரசியல் கருத்து கணிப்புகள் கூறின. இருந்தாலும் அவற்றை பொய்யாக்கி, இந்த இரு தொகுதிகளிலும் மீண்டும் தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தான் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது அதிமுக வசம் இருந்த இரண்டு தொகுதிகளையும் தவெக கைப்பற்றி உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுமே அதிமுக.,வின் கோட்டை என கருதப்பட்ட தொகுதிகளாகும். சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் விஜய் அலை அடித்து தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக.,விற்கு மக்கள் ஓட்டளித்து, வெற்றி பெற வைத்தார்கள். அதிலும் மதுராந்தகம் தொகுதியில் தவெக 3வது இடத்தையே பெற்றிருந்தது. தாராபுரத்தில் தவெகவுக்கு 2 இடம் கிடைத்திருந்தது.
ஆனால் நான்கே மாதங்களில் சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை அதிமுக, இடைத்தேர்தலில் கைநழுவ விட்டதுடன், இந்த இரண்டு தொகுதிகளிலும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் தொகுதி வன்னியர் சமூகத்தினர் அதிகம் உள்ள பகுதி. ஆனால் கவுண்டர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு செல்வாக்கு உள்ளதாக சொல்லப்பட்டு வந்த கொங்கு மண்டலத்தில் உள்ள தாராபுரம் தொகுதியிலேயே அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆரம்பம் முதலே தாராபுரம் தொகுதியில் அதிமுக, வலுவாக உள்ளதாக சொல்லப்பட்டு வந்து, வாக்கு எண்ணிக்கை துவங்கிய சிறிது நேரத்தில் முன்னணியில் இருந்த போதும், அடுத்தடுத்த சுற்றுகளில் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப்பட்டது அதிமுக. 2வது இடத்தைக் கூட அதிமுகவால் தக்க வைக்க முடியாமல் போனது தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது.
ஏற்கனவே செல்வாக்காக இருந்த தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் சட்டசபை தேர்தலில் அதிமுக தனது ஓட்டுக்களை இழந்து, தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இடைத்தேர்தலில் கொங்கு மண்டலத்திலேயே 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், கொங்கு பகுதியிலும் இரட்டை இலைக்கு இருக்கும் செல்வாக்கு சரிந்து விட்டது என்பதையே இது காட்டுகிறது.
ஏற்கனவே பெற்ற 47 எம்எல்ஏ.,க்களில் தற்போது இரண்டை அதிமுக இழந்துள்ளதால் அக்கட்சி எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை 45 ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே அதிமுக கட்சிக்குள் பல கருத்து வேறுபாடுகள், அதிருப்திகள், பிளவுகள் இருந்து வரும் நிலையில் மீண்டும் அக்கட்சி பெற்றுள்ள படுதோல்வியால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான குரல்கள் இன்னும் கட்சிகள் ஓங்கி ஒலிக்கும் நிலை உருவாகி உள்ளது.
ஒரு புறம் கட்சிக்கு குழப்பம் அதிகரிப்பதுடன், மற்றொரு புறம் மேலும் எல்எல்ஏ.,க்கள் மாற்று கட்சிகளை தேடி செல்வதற்கும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வழிவகுத்துள்ளன. இந்த நெருக்கடி நிலையை அதிமுக தலைமை எப்படி கையாள போகிறது, இழந்த பலத்தை எப்படி மீட்டெடுத்து, தொண்டர்களிடையே நம்பிக்கையை கொண்டு வரப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
பார்க்காப் பயிரும் கெடும்.. அவ்வையின் 60 ஆத்திச்சூடி மொழிகள் (1)
வான் சிறப்பு .. மாமழை போற்றுதும்..மாமழை போற்றுதம்!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
ஒரு நம்பி அப்பூதி அடியாருக்கும் அடியேன் .. அப்பூதி நாயனார்
கற்பனைக் குதிரை
{{comments.comment}}